வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வேலூரில் நடந்த திருப்பம்.. அதிமுகவின் காலை வாரிய பாஜக பார்முலா.. திமுக வென்றது இப்படித்தான்!

வேலூரில் இஸ்லாமியர்கள் வாக்குகள் வெல்வதற்காக அதிமுக போட்ட திட்டம் மிக சரியாக வேலை செய்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Vellore Election Result : திடீரென முன்னிலையில் வந்த கதிர் ஆனந்த்..அதிமுகவுக்கு பின்னடைவு- வீடியோ

    வேலூர்: வேலூரில் இஸ்லாமியர்களின் வாக்குகளை பெறுவதற்காக அதிமுக போட்ட திட்டம் கடைசியில் அந்த கட்சிக்கு உதவாமல் காலை வாரி இருக்கிறது. இதனால் தற்போது வேலூரில் திமுக மாஸ் வெற்றி பெற்றுள்ளது.

    வேலூர் லோக்சபா தேர்தலில் திமுக வெற்றிபெற்றுள்ளது. திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 485340 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.அதிமுக கூட்டணியின் புதிய நீதிக்கட்சி வேட்பாளர் ஏ.சி சண்முகம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு 477199 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவி உள்ளார்.

    திமுக 8141 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது . நீண்ட நேரம் முன்னிலை வகித்த அதிமுக இப்போது பின்னுக்கு சென்று தோல்வியை தழுவி உள்ளது.

    ஆரம்பத்தில் எப்படி

    ஆரம்பத்தில் எப்படி

    அதிமுக தொடக்கத்தில் வேலூரில் வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தது. ஆனால் கடைசி கட்டத்தில் எல்லாம் மாறியது. இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில்தான் கடைசியில் சுற்று வாக்குகள் எண்ணப்பட்டது. அங்கு ஏற்பட்ட மாற்றம்தான் அதிமுகவிற்கு பின்னடைவை தந்தது.

    போக போக என்ன

    போக போக என்ன

    வேலூரில் இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் ஆம்பூர் உள்ளிட்ட இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் இடங்களில் எல்லாம் அதிமுக ஆரம்பத்தில் முன்னிலை வகித்து வந்தது. பாஜகவுடன் கூட்டணி வைத்து இருந்தும் கூட, அதிமுக அங்கு முன்னிலை வகித்தது. ஆனால் தற்போது இஸ்லாமிய வாக்குகள் அதிமுகவிற்கு ஏமாற்றம் அளித்துள்ளது. ஆனால் அங்கு தொடக்கத்தில்தான் அதிமுக முன்னிலை வகித்தது.

    பாஜக இல்லை

    பாஜக இல்லை

    போக போக அங்கு டிரெண்ட் மாறியது. இஸ்லாமியர்களை கவர வேண்டும் என்று பாஜகவை அதிமுக பிரச்சாரம் செய்ய அழைக்காமல் இருந்தது. தமிழகத்தில் பாஜக தலைவர்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடையாது. பாஜக வேலூரில் பிரச்சாரம் செய்தால், அதிமுகவின் தோல்விக்கு அது காரணமாக இருக்கும் என்று கூட கூறப்பட்டது

    திட்டம்

    திட்டம்

    இஸ்லாமியர்களின் வாக்கு வங்கியை பாஜக பாதிக்கும். இதனால் பாஜகவின் முக்கிய தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன், எச்.ராஜா போன்ற யாருமே அதிமுகவுடன் தேர்தல் பிரச்சாரம் செய்ய வரவில்லை. ஆனால் பாஜகவின் திட்டம் அதிமுகவிற்கு கொஞ்சம் கூட கை கொடுக்கவில்லை. பாஜகவுடன் கூட்டணி வைத்ததற்காகவே அதிமுகவை வாக்காளர்கள் புறக்கணித்துள்ளனர்.

     கை கொடுக்கவில்லை

    கை கொடுக்கவில்லை

    முத்தலாக் மசோதாவிற்கு ஆதரவு அளித்து இஸ்லாமியா வாக்குகளை அதிமுக இழந்துள்ளது. இதுதான் கடைசி நேரத்தில் அதிரடி டிவிஸ்ட் நடக்க காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னணியில் இருந்த அதிமுக சரிய இதுதான் காரணம். இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் தொகுதிகளில் விழுந்த வாக்குகள்தான் மாற்றத்திற்கு காரணம்.

    இந்து வாக்குகள்

    இந்து வாக்குகள்

    அதே போல் பாஜகவை களமிறக்காமல் போனதால் இந்துத்துவா கொள்கை கொண்டவர்களின் வாக்குகளும் அதிமுகவிற்கு வராமல் போய் உள்ளது. அவர்கள் வந்திருந்தால், கொஞ்சம் பாஜக ஆதரவாளர்களாவது வாக்கு அளித்திருப்பார்கள். தற்போது இருந்ததையும் இழந்து தோல்வியை தழுவி உள்ளது அதிமுக.

    English summary
    Vellore Election Result: AIADMK alliance candidate got a huge number of Muslim votes.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X