Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேலூரின் அரசு ஊழியருக்கு வந்த சபலம்.. மெசேஜ் பார்த்ததுமே இப்படியும் நடக்குமா? உடனே வந்த சைபர் பிரான்ச்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூர் சைபர் கிரைம் போலீஸ் முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை தெரிவித்திருக்கிறார்கள்.. அதேபோல, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, தமிழ்நாடு காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த இரு விதமான அறிவிப்புகளும் பொதுமக்களின் நன்மைகளை கருதி வெளியிடப்பட்டிருக்கிறது. என்ன நடந்தது வேலூரில்?

வேலூர் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்த அந்த பெண்ணுக்கு 35 வயதாகிறது.. இவர் நகராட்சி அலுவலகத்தில் அரசு ஊழியராக வேலை பார்த்து வருகிறார்... கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பார்ட் டைம் வேலையில் சேர்ந்தால், அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று, இந்த பெண்ணுக்கு செல்போனில் மெசேஜ் வந்துள்ளது.

Vellore Government Employee cyber branch

சிறிய தொகை கமிஷன்

இதைப்பார்த்து சபலப்பட்ட பெண் ஊழியர், பார்ட் டைம் வேலை செய்ய விரும்பினார்.. இதனால், இப்பெண் ஊழியரை டெலிகிராம் குரூப்பிலும் சம்பந்தப்பட்டவர்கள் இணைத்துள்ளனர்...

இறுதியில், அரசு பெண் ஊழியர், ரூ.9 லட்சத்து 86 ஆயிரத்து 665 முதலீடு செய்துவிட்டார். அதில் சிறிய தொகையை கமிஷனாகவும் பெற்றுவிட்டார்.. இந்த கமிஷன் கிடைத்ததுமே, அவருக்கு ஆர்வமும், ஆசையும் அதிகமாகியது.. பின்னர், அந்த மொபைல் அப்ளிகஷேனில் பணத்தை எடுக்க முயன்றபோது, மேலும் பணத்தை முதலீடு செய்தால் தான், பணத்தை எடுக்க முடியும் என சொல்லியிருக்கிறார்கள்..

பார்ட் டைம் பணிகள்

இதனால் சந்தேகமடைந்த அரசு பெண் ஊழியர், பார்ட் டைம் பணிகள் குறித்து விசாரித்தபோது, பகுதிநேர வேலை என்ற பெயரில் தாம் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பது தெரியவந்தது.

இதுபோலவே, கணியம்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றி வரும் உதவி பேராசிரியரின் செல்போன் எண்ணிற்கும் இதுபோலவே, பார்ட் டைமில் சேர்ந்து அதிக லாபம் சம்பாதிக்கலாம், இதற்கு முதலீடு செய்ய வேண்டும் என்றும் கூறி மெசேஜ் வந்துள்ளது.

இதனால், பேராசிரியரும் ரூ.13 லட்சத்து 68 ஆயிரத்து 591 முதலீடு செய்துள்ளார்.. ஆனால், அவருக்கு எந்த பணமும் கிடைக்கவில்லை. இதையடுத்து, முதலீடு ஆசைக்காட்டி ஏமாந்த அரசு பெண் ஊழியர், உதவி பேராசிரியர் இருவருமே வேலூர் சைபர் கிரைம் போலீசுக்கு ஓடினார்கள்.. தங்களிடம் ரூ.23.54 லட்சம் மோசடி நடந்ததாகவும், தங்களது பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்..

வேலூர் கிரைம் போலீஸ்

தனித்தனியாக தரப்பட்ட இவர்களது புகார்களின் பேரில் வேலூர் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.. அதுமட்டுமல்ல, பேஸ்புக் மற்றும் சமூக வலைதளங்களில் வரும் பங்குச்சந்தை முதலீடு விளம்பரங்கள், பகுதி நேர வேலை போன்ற பல்வேறு விளம்பரங்களை பார்த்து பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என்று இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.

இதனிடையே, தமிழ்நாடு சைபர் கிரைமின் அதிகாரப்பூர்வ பெயர், லோகோவை பயன்படுத்தி, சில நேர்மையற்ற நபர்கள் போலி சமூக ஊடக கணக்குகளை உருவாக்கி வருவதாகவும், மக்கள் எச்சரிக்கையாக இருக்க போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் வெளியிட்ட அறிக்கை இதுதான்:

நேர்மையற்ற நபர்கள்

"சைபர் குற்றப் பிரிவின் அதிகாரப்பூர்வ பெயர் மற்றும் லோகோவை பயன்படுத்தி, சில நேர்மையற்ற நபர்கள், போலி சமூக ஊடக கணக்குகளை உருவாக்கி வருவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த போலி கணக்குகள், பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், அந்த கணக்குகள் மூலம் பகிரப்படும் தகவல்களின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகங்கள் எழுகின்றன.

இப்படிப்பட்ட போலி கணக்குகள், அதிகாரப்பூர்வ கணக்குகளை ஒத்த பெயர்களையும், அரசின் லோகோக்களையும் பயன்படுத்துவதன் மூலம், மக்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர். இந்த போலி கணக்குகளின் பெருக்கம், பொதுமக்களின் நம்பிக்கை மற்றும் டிஜிட்டல் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயமாக உள்ளது.

தமிழ்நாடு சைபர் குற்றப்பிரிவு

தமிழ்நாடு சைபர் குற்றப்பிரிவுக்கு, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளம் ஆகியவற்றில் தலா ஒரு கணக்கு, அதாவது @tncybercrimeoff என்ற கணக்கு மட்டுமே இருப்பதால், போலி கணக்குகள் மூலம் வெளியிடப்படும் தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம்.. 10 போலி இன்ஸ்டாகிராம் கணக்குகளும், 4 ட்விட்டர் கணக்குகளும், தங்களை அதிகாரப்பூர்வ சைபர் கிரைம் குற்றப்பிரிவு என தவறாக சித்தரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த போலி கணக்குகள், அதிகாரப்பூர்வ லோகோ, சுயவிவர பெயர்கள் மற்றும் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உள்ளடக்கத்தை போலவே காட்சிகளை பயன்படுத்தப்படுகின்றன. இந்த கணக்குகளை முடக்குவதற்காக, ஆள்மாறாட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட அனைத்து போலி கணக்குகளும் அந்தந்த தளங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில், அரசுத் துறைகளைச் சேர்ந்தவை என கூறப்படும் தகவல் தொடர்புகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இருக்க வேண்டும்.. எந்த ஒரு சமூக ஊடக கணக்கிலிருந்து வரும் செய்திகளுக்கும் பதிலளிப்பதற்கு முன், அதன் நம்பகத்தன்மையை சரிபார்க்க வேண்டும்.

ஆதார் எண், வங்கி விவரங்கள்

சந்தேகத்திற்கிடமான கைப்பிடியில், ஆதார் எண், வங்கி விவரங்கள், ஓடிபி போன்ற தனிப்பட்ட தகவல்களை பகிர்வதை தவிர்க்க வேண்டும். அத்தகைய கணக்குகள் குறித்து உடனடியாக அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

அரசாங்க துறைகள் சமூக ஊடக தளங்கள் மூலம் ரகசிய தகவல்களை கேட்காது.. அத்தகைய தகவல்களை பகிர்வதற்கு முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அத்தகைய இணையதளங்கள் குறித்து புகாரளிக்க, சைபர் கிரைம் உதவி எண் 1930-வை தொடர்பு கொள்ளலாம். இல்லாவிட்டால், www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம்" என்று அறிக்கையின் மூலம், தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+