"வார்த்தைய" விட்ட வேலூர் இப்ராஹிம்.. கடுப்பான திமுக.. அதைவிடுங்க. வேலூரில் "தாமரை" மலர போகுதாமே.. பலே
வேலூர்: பாஜகவுக்கு இனி ஏறுமுகம்தான்.. திமுகவுக்கு இனி இறங்குமுகம்தான் என்று உறுதியாக தெரிவித்துள்ளார் பாஜகவின் வேலூர் இப்ராஹிம்.
வரும் எம்பி தேர்தலில், வேலூர் தொகுதியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதற்கான ஆலோசனை கூட்டம் வேலூரில் நடைபெற்றது.. வேலூர் பாஜக அலுவலகத்தில், பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், இந்த ஆலோசனை கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்.

வேலூர் இப்ராஹிம்: இக்கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் வேலூர் இப்ராஹிம் பேசும்போது, "வரும் எம்பி தேர்தலில், 25 தொகுதிகளில் என்டிஏ நிச்சயம் வெல்லும்.. ஆனால், 39 தொகுதிகளிலும் பாஜக வெல்ல வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம்.. மேலும், இந்த முறை வேலூரில் தாமரை நிச்சயம் மலரும்.
அமைச்சரவையை மாற்றுவதாக இருந்தால், அதற்கான காரணத்தை முதல்வர் ஸ்டாலின் தெரிவிக்க வேண்டும்தானே? "செந்தில் பாலாஜி மீது வழக்கு இருக்கிறது.. அந்த வழக்கின் காரணமாக, வருமான வரித்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.. அதனால் அமைச்சரவையை மாற்றுகிறோம்" என்று சொன்னால், அது உண்மையான தகவல்.
உண்மையான தகவல்: அதைவிட்டுட்டு, அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார், அதனால் மாற்று அமைச்சரவையை மாற்றுகிறோம் என்று பொய்யான விஷயத்தை அனுப்புகிறார்களே? பொய்யான தகவலை பதிவு செய்கிறார்களே?
அப்படியானால், அதை தவறான தகவல் என்றுதான் ஆளுநர் குறிப்பிடுவார்.. உண்மைத்தகவலை சொன்னால், அதை ஆளுநர் பரிசீலித்து, தமிழக முதல்வர் யாரை அமைச்சராக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ, அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்துவிடுவார்.. இதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இல்லை.
எனவே, பொய்யான தகவல் என்பதைவிட, உண்மையான தகவலை மறைக்கிறார்கள்.. வருமானவரித்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கக்கூடிய குற்றவாளி என்பவர், இன்று பொறுப்பில்ல் இல்லாத அமைச்சராக தொடர்கிறார்.. இந்த விஷயத்தில் தவறான தகவலை சொல்லும் திரு.ஸ்டாலின் அவர்கள், மக்களை ஏமாற்றுகிறார்.. சட்டத்தையும் ஏமாற்றுகிறார்.
கடும் கண்டனம்: கவர்னர் இல்லாத ஒரு அரசை நடத்த வேண்டும் என்று நினைத்தால், அரசியலமைப்புக்கு எதிராக பிரவினைவாதத்தை உருவாக்குவதாகவே அர்த்தம். பாஜக சார்பாக அதற்கு எங்கள் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம்.
பாஜகவை எப்போதுமே ஊழலற்ற கட்சி.. அதை சொல்வதற்கான நெஞ்சுறுதி எங்களுக்கு நிறையவே இருக்கிறது. பாரத பிரதமர் மோடி தலைமையில் 9 ஆண்டு கால ஆட்சியில், அவர்மீது எந்த ஊழல் குற்றச்சாட்டுகளும் இல்லை.. அதேபோல, மத்திய அமைச்சர்கள் யார் மீதும் எந்த ஊழல் குற்றச்சாட்டுகளும் இல்லை.. அதேபோல, மத்திய அரசு கொண்டுவந்த நலத்திட்டங்களிலும் எந்தவொரு குறைகளும் கிடையாது.. அதனால், யார் ஊழல் செய்தாலும், அதில் எங்களுக்கு தயவுதாட்சண்யம் இருக்காது. இனி பாஜகவுக்கு ஏறுமுகம்தான்.. திமுகவுக்கு இறங்குமுகம்தான்" என்றார் இப்ராஹிம்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications