வேலூரில் தூக்கியெறியப்பட்ட டிஐஜி ராஜலட்சுமி.. ஜெயிலில் கைதி சித்ரவதை அம்பலம்? கறார் காட்டிய சிபிசிஐடி
வேலூர்: ஆயுள் தண்டனை கைதியை சித்திரவதை செய்த புகாரில் வேலூர் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. இது சிறைத்துறை வட்டாரங்களில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியைச் சேர்ந்தவர் சிவக்குமார். கொலை வழக்கு ஒன்றில் கைதாகி, ஆயுள் தண்டனை பெற்றவர்.. வேலூர் சிறையில் தண்டனையும் பெற்றுவந்தார்.

டிஐஜி: இந்த நிலையில், சிறைத்துறை டிஐஜியின் வீட்டு வேலைக்கு சிவக்குமாரை பயன்படுத்தி வந்தார்களாம். அப்போது, டிஐஜி வீட்டில் ரூ.4.25 லட்சம் காணாமல் போனதாக சிவக்குமாரை அடித்து தாக்கினார்களாம். இது தொடர்பாக சென்னை ஹைகோர்ட்டில் சிவக்குமாரின் அம்மா வழக்கு தொடர்ந்தார்.
அப்போதுதான், டிஐஜி வீட்டில்தான் சிவக்குமாரை வேலைக்கு பயன்படுத்தி விஷயமே தெரியவந்தது.. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்பேரில் வேலூர் தலைமை நீதித்துறை நடுவர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை ஒன்றையும் தாக்கல் செய்தார்.. அந்த அடிப்படையின்பேரில், சேலம் மத்திய சிறைக்கு சிவக்குமார் உடனடியாக மாற்றப்பட்டார்.
மேலும், வேலூர் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் உட்பட 14 பேர் மீது 5 பிரிவுகளில் கீழ் சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணை: அதேபோல, சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவக்குமாரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சிபிசிஐடி எஸ்.பி., வினோத் சாந்தாராம் தலைமையில் சென்னை டிஎஸ்பி சசிதர், சேலம் டிஎஸ்பி சென்னித் இளங்கோ மற்றும் வேலூர் சிபிசிஐடி ஆய்வாளர் இந்திரா உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழுவினர் சேலம் மத்திய சிறைக்கு சென்று கைது சிவக்குமாரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவருடைய வாக்குமூலத்தையும் கேமராவில் பதிவு செய்துகொண்டனர்.
இதற்கு பிறகு, வேலூர் சிறை அதிகாரிகளிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.. அத்துடன், சிறையிலுள்ள மற்ற கைதிகளிடமும் விசாரணை நடத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல் வெளியானது.. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக வேலூர் சிறைத்துறை டிஐஜி உள்பட 14 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கூடுதல் பொறுப்பு: சேலம் மற்றும் வேலூர் மத்திய சிறையில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை சரக சிறைத்துறை டிஐஜி முருகேசன், வேலூர் சரக சிறைத்துறை டிஐஜியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications