வேலூர் கலைவாணிக்கு கல்யாணத்திற்கு பிறகு மலர்ந்த கள்ளக்காதல்.. எந்த கணவனுக்கு இப்படி ஆகக்கூடாது
வேலூர்: வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே பெரிய ஊனை அருகே உள்ள வெங்கடசாமி ரெட்டி கிராமத்தை சேர்ந்தவர் தேவேந்திரன். இவர் கட்டுமான தொழிலாளி ஆவார். சென்ட்ரிங் வேலைகள் செய்து வந்துள்ளார். இவர் கலைவாணி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். ஆனால் கலைவாணிக்கு வேறு ஒரு ஆணுடன் திருமணத்திற்கு பிறகு கள்ளக்காதல் வந்ததாம்.. இதனால் கலைவாணியே காதல் கணவனுக்கு எமனாக மாறி உள்ளார். மனைவி அளித்த வாக்குமூலத்தை பார்ப்போம்.
திருமணத்திற்கு பிறகு வரும் கள்ளக்காதல் இந்தியாவில் பெரிய அளவில் சிக்கலை ஏற்படுத்துகிறது. கணவனுக்கு தெரியாமல் மனைவியும், மனைவிக்கு தெரியாமல் கணவனும் வேறு ஒரு உறவை தொடர்கிறார்கள். கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் ஏமாற்றிக் கொண்டு வாழ்கிறார்கள். ஒரு கட்டத்தில் உண்மை தெரியும் போது கணவனை மனைவி போட்டு தள்ளுவது, மனைவியை கணவன் போட்டு தள்ளுவது நடக்கிறது. குறிப்பாக கணவனை கள்ளக்காதலனுடன் சேர்த்து மனைவி கொலை செய்த சம்பவங்கள் அதிக அளவில் நடந்த செய்திகளை ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள்.. அப்படியான ஒரு சம்பவம் தான் வேலூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா பள்ளிகொண்டா அடுத்த பெரிய ஊனை அருகே உள்ளது வெங்கடசாமி ரெட்டி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரனுக்கு 35 வயது ஆகிறது.இவர் கட்டிட பணிகளுக்கு கம்பி கட்டும் பணிகளை மேற்கொண்டு வந்தார். இவரது மனைவி கலைவாணிக்கு 33 வயது ஆகிறது. கலைவாணியும் தேவேந்திரனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் குடும்ப தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை பொந்தியம் தோப்பு பகுதியில் தேவேந்திரன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரித்தபோது கள்ளக்காதல் விவகாரம் போலீசாருக்கு தெரியவந்தது.
இதுபற்றி தேவேந்திரனின் மனைவி கலைவாணியிடம் சந்தேகத்தின் பேரில் நடத்திய விசாரணையில் அவரது கள்ளக்காதலன் அருண்குமார், தேவேந்திரனை கொலை செய்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தார்கள்.
அப்போது கலைவாணியின் கள்ளக்காதலன் அருண்குமார் போலீசாரிடம் கூறுகையில், நான், தேவேந்திரன், கலைவாணி ஆகிய மூன்று பேரும் ராணிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் தோல் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தோம். அப்போது நான் கலைவாணியை காதலித்து வந்தேன். இந்த நிலையில் தேவேந்திரன் கலைவாணி மீது சந்தேகப்பட்டு அடிக்கடி அவரை தாக்கி எங்களுக்கு இடையூறாக இருந்து வந்தார். எனவே தேவேந்திரனை மதுகுடிக்க அழைத்து பீர் பாட்டிலால் அடித்து கொலை செய்தேன் என்று கூறினார். கலைவாணி மற்றும் அருண்குமார் கொடுத்த வாக்குமூலத்தின் பேரில் பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications