வேலூர் தொகுதி:மீண்டும் களத்தில் கதிர் ஆனந்த்..வெற்றி முனைப்பில் மோடியை மலையாய் நம்பும் ஏசி சண்முகம்!
வேலூர்: லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் நிச்சயம் தாமரை மலரக் கூடிய தொகுதியாக வேலூர் இருக்கும் என்பது பிரதமர் மோடி உள்ளிட்ட டெல்லி தலைவர்களின் நம்பிக்கை. இந்த நம்பிக்கையை நிறைவேற்றுவாரா எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி.. தற்போது பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏசி சண்முகம்.
வேலூர் லோக்சபா தொகுதியில் அடங்கியுள்ள சட்டசபை தொகுதிகள்: வேலூர், அணைக்கட்டு, கே. வி. குப்பம் (தனி), குடியாத்தம் (தனி), வாணியம்பாடி, ஆம்பூர். இஸ்லாமியர்கள் அதிக வாக்காளர்களாக இருக்கும் தொகுதி. வேலூர் தொகுதியில் 5 முறை திமுக, காங்கிரஸ் 3 முறை, அதிமுக, பாமக இரு முறை வென்றுள்ளன. திமுக அணியில் முஸ்லிம் லீக் ஒரு முறை வென்றுள்ளது. 6 முறை முஸ்லிம் வேட்பாளர்கள் வென்ற தொகுதி இது. 2021-ல் 4 தொகுதிகளில் திமுக, 2-ல் அதிமுக வென்றிருந்தன.

வேலூர் லோக்சபா தொகுதி வாக்காளர்கள் எண்ணிக்கை:15,09,964; ஆண்கள்- 7,31,831; பெண்கள் - 7,77,922; 3-ம் பாலினத்தவர் 211
2009-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்ள்
அப்துல் ரஹ்மான்(திமுக) 3,60,474
வாசு(அதிமுக) 2,53,081
சௌகத் செரிப்(தேமுதிக) 62,696
இராஜேந்திரன் (பாஜக) 11,184
2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
செங்குட்டுவன்(அதிமுக) 3,83,719
ஏ. சி. சண்முகம் (புதிய நீதிக் கட்சி) 3,24,326
அப்துல் ரஹ்மான்(முஸ்லிம் லீக்) 2,05,896
விஜய இளஞ்செழியன்(காங்கிரசு ) 43,960
2019-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
கதிர் ஆனந்த் (திமுக) 4,85,340
ஏசி சண்முகம்( அதிமுக) 4,77,199
தீபலட்சுமி (நாம் தமிழர்) 26,995
2024-ல் களம் காணும் வேட்பாளர்கள்
கதிர் ஆனந்த் (திமுக)
பசுபதி (அதிமுக)
ஏசி சண்முகம் (பாஜக)
மகேஷ் ஆனந்த் (நாம் தமிழர் கட்சி)
வேலூர் தொகுதி நிலவரம்: வேலூர் லோக்சபா தொகுதியில் பெரும் பண பலம் கொண்ட ஏசி சண்முகம் மீண்டும் களம் காண்கிறார். 1980-ல் ஆரணி எம்.எல்.ஏ, 1984-ல் அதிமுக எம்பி என அறியப்பட்ட முகம்தான் ஏசி சண்முகம். சிட்டிங் எம்பியும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் மகனுமான கதிர் ஆனந்த் 2-வது முறை களம் காண்கிறார். பிரதமர் மோடி உள்ளிட்டோர் பாஜக வென்றாக வேண்டும் என விரும்புகிற தொகுதி வேலூர். 2019-ம் ஆண்டு பணப் பட்டுவாடா காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டு பின்னர் நடத்தப்பட்டது. திமுகவின் கதிர் ஆனந்த் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில்தான் ஏசி சண்முகத்தை வீழ்த்தினார். ஆனால் அப்போது ஏசி சண்முகம் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் நின்றார். தற்போது ஏசி சண்முகம், பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். திமுகவின் உதயசூரியன் vs அதிமுகவின் இரட்டை இலை என்கிற போட்டி எப்போதும் கடுமையாக இருக்கும்; அதே நேரத்தில் திமுகவின் உதயசூரியன் vs பாஜகவின் தாமரை என்கிற போது சூரியன் ஜொலிக்கவே செய்யும். நாம் தமிழர் கட்சி இத்தொகுதியில் கணிசமாக கூடுதல் வாக்குகளைப் பெறும் எனவும் கூறப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications