அமைதியாக நடந்து முடிந்தது வேலூர் லோக்சபா தேர்தல்.. அணைக்கட்டு தொகுதியில் வாக்குப்பதிவு அமோகம்
Recommended Video
வேலூர்: வேலூர் லோக்சபா தொகுதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி அமைதியான முறையில் நடந்தது. மாலை 6 மணி அளவில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மாலை 5 மணி நிலவரப்படி 62.94 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது.
கடந்த ஏப்ரல் மாதம் நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் தொகுதிக்கான லோக்சபா தேர்தல் இன்று நடந்தது. இதில் அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் டி.எம்.கதிர்ஆனந்த், நாம் தமிழர் சார்பில் எஸ்.தீபலட்சுமி, உள்பட மொத்தம் 28 பேர் போட்டியிட்டனர்.

வேலூர் தொகுதியில் மொத்தம் 14,32,555 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண்கள் 7,01,351, பெண்கள் 7,31,099, மூன்றாம் பாலினத்தவர் 105 பேர் உள்ளனர். தேர்தலையொட்டி, வேலூர் மக்களவைத் தொகுதி முழுவதும் 1,553 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது..
இத்தேர்தலில் மொத்தம் 28 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலா 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. அதன்படி, மொத்தம் 3,752 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் இயந்திரங்கள் (விவி பேட்) தலா 1,896 இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டது.
வாக்குப்பதிவு பணிகளில் மொத்தம் 7,552 அலுவலர்கள் ஈடுபட்டார்கள் மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ள 179 வாக்குச்சாவடிகளைக் கண்காணிக்க மத்திய அரசு ஊழியர்கள் 210 பேர் நுண்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு இருந்தார்கள்.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. காலை முதலே மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். இதனால் மாலை 5 மணி நிலவரப்படி 62.94 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. வேலூர் சட்டமன்ற தொகுதியில் 58.55%, அணைக்கட்டு தொகுதியில் 67.61 %, கேவி குப்பம் தொகுதியில் 67.25 %, வாணியம்பாடியில் 52%, ஆம்பூரில் 62.94 % வாக்குகள் பதிவாகி இருந்தது.
வேலூர் தேர்தலுக்காக வடக்கு மண்டல காவல் துறைத் தலைவர் நாகராஜன் தலைமையில் சுமார் 1,600 வீரர்கள், 12 கம்பெனியைச் சேர்ந்த தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 3,937 தமிழக போலீஸார், 400 ஊர்க் காவல் படையினர் என மொத்தம் 6 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு இருந்தார்கள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications