100 ஆடுகள்.. அண்டா அண்டாவாக ஆட்டுக்கறி ரெடி.. மலைக்க வைத்த மலைவாழ் மக்கள் திருவிழா.. ஜரூர் "ஜலாமரம்"
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் நடந்த மலைவாழ் மக்களின் திருவிழா, இணையத்தில் வைரலாகி, பரவசத்தை தந்து வருகிறது.
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த ஆசனாம்பட்டு கிராமத்தில் பழமையான தேசத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு, வருடந்தோறும் வைகாசி மாதம் 10ம் தேதி தேசத்து மாரியம்மன் சிரசு திருவிழா நடைபெறுவது வழக்கம்.

மலைவாழ் மக்கள்: அதேபோல, ஒடுகத்தூர் அருகே தொங்குமலை கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயிலிலும் கோலாகலமாக மலைவாழ் மக்களின் பாரம்பரிய திருவிழா நடைபெறும்.. வேலூர் மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்றது இந்த மலைவாழ் மக்களின் திருவிழாவாகும்.
ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்டது இந்த தொங்குமலை கிராமம்.. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள்..
ஜலாமரம்: இங்கு பல தலைமுறைகளை கடந்து பாரம்பரியமாக காளியம்மன் கோயில் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது... இதற்காகவே, வெட்டவெளியில் ஜலாமரம் என்ற மரம் வைத்து வழிபட்டு வருகிறார்கள் அக்கிராம மக்கள். மலைவாழ் மக்களின் முன்னோர்கள் வழிபட்டு வந்த மரம் இதுவாகும். கயிறு, மரக்கட்டையாலான கத்திகள், மேளம் போன்றவற்றை முன்னோர்கள் இந்த மரத்தில் வைத்துதான் வழிபட்டு வந்திருக்கிறார்கள்.
அதேபோல, இந்த திருவிழாவில் முத்தாய்ப்பாக அமைவது எருகட்டும் நிகழ்ச்சியாகும். இதனை காணவே, சுற்றுவட்டாரத்திலிருந்து ஆயிரக்கணக்கானோர் திரண்டு வருவது வழக்கமாகும். அந்தவகையில், இந்த வருடமும் தொங்குமலை கிராமத்தில் காளியம்மன் கோயில் திருவிழாவுக்காக, ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே அந்த பகுதி மக்கள் காப்பு கட்டி விரதத்தை ஆரம்பித்தார்கள்..
எருகட்டும் நிகழ்ச்சிக்காகவே, இந்த எருதுகட்டும் நிகழ்ச்சிக்காக மிகப்பெரிய மைதானத்தில் மூங்கில்களால் அமைக்கப்பட்ட 6 கொட்டகைகள் கட்டப்பட்டன.. வாழை, வண்ண மலர்கள், பலா, மாம்பழம் உள்ளிட்டவற்றை கொண்டு அவைகள் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.
அலங்காரம்: பின்னர் நேற்று முன்தினம் அதாவது 3வது நாள் திருவிழாவில் காளியம்மன் கோயில் திருவிழா கோலாகலமாக நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேகமும் நடந்தது.. இதற்காகவே, மலைவாழ் மக்கள், ஊர் சீதனத்தை கொண்டு வந்திருந்தனர்.. பிறகு, நேர்த்திக்கடனுக்காக கிட்டத்தட்ட 100 ஆடுகளை பலியிட்டு காளியம்மனை வழிபட்டார்கள்.. இதற்குபிறகு, ஜாலாமரம் என்றழைக்கப்படும் மரத்தில் வழிபாடு செய்யப்பட்டது..
அடுத்ததாக, அங்கு அமைக்கப்பட்டிருந்த 6 கொட்டகைகளில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 150க்கும் மேற்பட்ட மாடுகளை அடைத்து வைத்தனர்.. மதியம் ஒரு மணியளவில் ஒவ்வொரு கொட்டகையில் இருந்து அடைத்து வைக்கப்பட்டிருந்த மாடுகளை ஒவ்வொன்றாக கயிறு கட்டி அவிழ்த்து விட்டனர். அப்போது, அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் காளைகளை தட்டி ஆரவாரம் செய்தனர்.
மலை கிராமங்கள்: இந்த விழாவினை காண பீஞ்சமந்தை, சின்ன எட்டிபட்டி, தேந்தூர், பெரியபணப்பாறை, பலாம்பட்டு, ஜார்தான்கொல்லை உள்ளிட்ட ஏராளமான மலை கிராமங்களில் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து ரசித்தார்கள்.
விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் வீடுகளில் கறி விருந்து பரிமாறப்பட்டது... விழாவில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த திருவிழா வைபோகம்தான், வேலூர் மாவட்டத்தில் பக்தி பரவசத்துடன் பேசப்பட்டு வருகிறது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications