வேலூரில் ஓடும் ரயிலில் விழுந்த கணவர்.. பின்னாடியே மனைவி.. தடம் புரண்ட வாழ்க்கை.. கற்க வேண்டிய பாடம்
வேலூர்: வேலூர் காட்பாடி ரயிலில் நடந்த இந்தத் துயரச் சம்பவம் நெஞ்சை உலுக்கும் வகையில் அமைந்துள்ளது. மும்பையில் உணவகம் நடத்தி வந்த சிவகண்டன் மற்றும் அவரது மனைவி கலையரசி ஆகியோரின் மரணம், ஒரு குடும்பத்தையே நிலைகுலையச் செய்துள்ளது... இந்த தம்பதிக்கு என்னதான் ஆச்சு?
கள்ளக்குறிச்சி மாவட்டம் அய்யனார் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சிவகண்டன், 37. இவரது மனைவி கலையரசி. இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.

வேலூர் காட்பாடி ரயில்
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில், சிவகண்டன், சொந்தமாக ஹோட்டல் நடத்தி வந்தார். சிவகண்டனின் பாட்டி இறந்ததால், இறுதி சடங்குகளுக்கான காரியம், திருக்கோவிலுாரில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள, மும்பையிலிருந்து திருநெல்வேலி செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருவரும் வந்துள்ளனர்..
ஓடும் ரயிலின் வாசல் அருகே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென நிலைதடுமாறி கணவன் விழுந்துவிட்டார்.. இதை பார்த்து துடிதுடித்த மனைவி, கணவனை காப்பாற்ற போனார்.. கடைசியில் அவரும் ரயிலில் விழுந்து இறந்துவிட்டார்..
ஓடும் ரயிலில் சோகம்
தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த சக பயணிகள் இந்த கோர விபத்தைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயினர்... உடனடியாக அந்த பகுதி மக்கள் களம்பூர் ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த காட்பாடி ரயில்வே போலீசார் சிவகண்டன், கலையரசி உடல்களை போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக வேலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஊர் திரும்பிய தம்பதியினர், சடலமாக திரும்புவதை அந்தப் பகுதி மக்களால் ஜீரணிக்க முடியவில்லை. தன் பாட்டியின் காரியத்திற்காக வந்த சிவகண்டன், தன் மனைவியுடன் சேர்ந்து உயிரிழந்தது அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மனைவியும் உயிரிழப்பு
பாதுகாப்பற்ற முறையில் ரயிலின் கதவருகே நின்று பயணம் செய்வது எத்தகைய பேராபத்தை விளைவிக்கும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு கசப்பான பாடமாக அமைந்துள்ளது.
இவர்களின் மறைவால் ஆதரவற்ற நிலையில் தவிக்கும் அந்த 3 பெண் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது... ஒரு கணம் செய்த கவனக்குறைவு, ஒரு அழகான குடும்பத்தைச் சிதைத்துவிட்டது. இதுபோன்ற விபத்துகள் இனி நிகழாமல் இருக்க, பயணத்தின்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம் என்பதை இந்தச் சம்பவம் நமக்கு மீண்டும் ஒருமுறை உணர்த்துகிறது.
3 பெண் குழந்தைகள்
இப்போது தம்பதி இருவரின் சடலங்களும், வேலூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.. இருவரின் உடலை கண்டு மொத்த உறவினர்களின் அழுகுரல் அந்த இடத்தையே சோகமயமாக மாற்றியது. காட்பாடி ரயில்வே போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கதவோரம் நின்று வேடிக்கை பார்ப்பது போன்ற ஆபத்தான செயல்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.. எனினும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்தத் துயரத்திலிருந்து மீண்டு வருவது என்பது எளிதான காரியம் அல்ல... பாவம் அந்த 3 பெண் குழந்தைகளும்!!!
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications