வேலூர் புதுப்பெண் நர்மதா.. மண்ணுக்கு போற உடம்பு.. நெகிழ வைத்த குடும்பம்
வேலூர்: இன்றைக்கு உடல் உறுப்பு தானம் விஷயத்தில் மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. விபத்தில் மூளைச்சாவு அடைந்தால், உடனே உடல் உறுப்புகளை தானம் செய்ய வேண்டும் என்று குடும்பத்தினர் விரும்புகிறார்கள். அப்படித்தான் விபத்தில் மூளைச்சாவு அடைந்த வேலூர் புதுப்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது. இது பலரையும் வாழ வைத்துள்ளது.
வேலூர் கருகம்புத்தூர் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் இருந்தார்கள். இதில் 3-வது மகள் நர்மதாவுக்கு 24 வயது ஆகிறது. இவருக்கும் சென்னையைச் சேர்ந்த திருவேங்கடம் (28) என்பவருக்கும் 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருவேங்கடம் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்த புதுமண தம்பதி கடந்த 21-ந்தேதி சென்னையில் இருந்து ராணிப்பேட்டைக்கு இருசக்கர சென்றபோது விபத்தில் சிக்கினர். இதில் நர்மதாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. திருவேங்கடத்துக்கும் கை, கால்களில் காயங்கள் ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய நர்மதா சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சையில் இருந்த நர்மதா மூளைச்சாவு அடைந்தார். இதனையடுத்து குடும்பத்தினர் நர்மதாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். தொடர்ந்து அவரின் இதயம், சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல் போன்ற உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரது அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
இதுகுறித்து நர்மதாவின் தாயார் மகேஸ்வரி கூறும் போது, 'மண்ணோடு உடல் போவதை விட, மற்ற சிலருக்கு வாழ்வு கிடைக்கட்டும் என்ற நல்லெண்ணத்தில், முழு சம்மதத்துடன் அவள் கண்களைத் தவிர மற்ற அனைத்து உடல் உறுப்புகளையும் தானம் செய்துள்ளோம்' என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
இந்தியாவிலேயே உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறது. இது அவர்களின் தியாகத்தைப் போற்றும் ஒரு செயலாகும்.
உறுப்பு தானம் செய்ய விரும்புவோர் TRANSTAN (Transplant Authority of Tamil Nadu) என்ற அரசு அமைப்பின் இணையதளத்தில் பதிவு செய்து 'Donor Card' பெற்றுக்கொள்ளலாம். மிக முக்கியமாக, உங்கள் விருப்பத்தை உங்கள் குடும்பத்தினரிடம் தெரிவித்து வைக்க வேண்டும். ஏனெனில், மரணத்திற்குப் பிறகு குடும்பத்தினரின் சம்மதம் இருந்தால் மட்டுமே உறுப்புகளை எடுக்க முடியும். ஒருவர் உடல் உறுப்பு தானம் செய்வதன் மூலம் 8 நபர்களுக்கு மறுவாழ்வு அளிக்க முடியும் மற்றும் கண், தோல் போன்ற திசு தானம் மூலம் 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு உதவ முடியும். "மண்ணோடு போவதை விட மற்றவருக்கு வாழ்வு கிடைக்கட்டும்" - இதுவே உறுப்பு தானத்தின் அடிப்படை நோக்கமாக பார்க்கப்படுகிறது.
-
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்! -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு












Click it and Unblock the Notifications