Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேலூரில் நுழைந்த "விருந்தாளி".. யார்னு பாருங்க.. அதுவும் அர்த்த ராத்திரியில்.. அதிர்ந்த "அணைக்கட்டு"

Subscribe to Oneindia Tamil

வேலூர்: அணைக்கட்டு பகுதியில் நடந்த சம்பவம் ஒன்று இணையத்தில் வீடியோவாக வெளியாகி பதற செய்து வருகிறது.. என்ன நடந்தது அணைக்கட்டில்?

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ளது ஊனை மோட்டூர் என்ற கிராமம்.. இந்த கிராமத்திலுள்ள ஒருவரின் வீட்டின் முன்பு, பூனை இறந்து கிடந்தது... அந்த பூனை எங்கிருந்தும் வந்தது? எப்படி இறந்தது என்று தெரியவில்லை.

Vellore news and villagers panic due to movement of leopards in the Streets

சிசிடிவி கேமரா: அதனால், அந்த பூனை எப்படி இறந்தது என்பதை கண்டுபிடிக்க, அந்த வீட்டின் ஓனர், தன்னுடைய வீட்டு வாசலில் பொருத்தி வைத்திருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்தார்.. அப்போது, ஏதோ ஒரு பெரிய மிருகம், வீட்டு வாசலில் கிடந்த பூனையை கடித்து கடித்து குதறியது பதிவாகி இருந்தது. அந்த பெரிய விலங்கை பார்ப்பதற்கு சிறுத்தை போலவும் இருந்ததே தவிர, சிறுத்தைதானா? என்பது உறுதியாகவில்லை.

ஆனால், அதற்குள் இந்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகிவிட்டது.. அணைக்கட்டு மக்களே பதறிப்போனார்கள்.. ஊருக்குள் வந்தது என்ன மிருகம் என்று தெரியாமல் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.. பயந்துகொண்டு, கதவை தாழிட்டு கொண்டனர்..

வனத்துறையினர்: இந்த வீடியோ குறித்து ஒடுகத்தூர் வனத்துறையினருக்கும் தகவல் தெரியவரவும், நேரடியாக கிளம்பி வந்து விசாரணை நடத்தினார்கள்.. அந்த வீடியோவை ஆய்வு செய்தபோது, பூனையை கொன்றது இன்னொரு பூனையாக இருக்குமோ? என்ற சந்தேகம் வலுத்தது. கேமராவில் பார்ப்பதற்கும் அந்த உருவம் பூனை போலவே தெரிந்ததாம்.

Vellore news and villagers panic due to movement of leopards in the Streets

இதுகுறித்து அதிகாரிகள் சொல்லும்போது, அந்த வீட்டின் முன்பு பொருத்தப்பட்ட கேமரா காட்சி மட்டுமே கையில் உள்ளது. இந்த வீடியோவில் இருப்பது சிறுத்தை தானா என்பது முழுமையாக தெரியவில்லை.. நாய் போன்ற உருவமும் அதில் பதிவாகி இருப்பதாக தெரிகிறது..

காப்பகம்: பூனையை துரத்தி சென்று கடித்து குதறியது நாய் தான் என்பது 60 சதவீதம் உறுதியாகி உள்ளது. எனினும், இதனை ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் காப்பகத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம். அங்கு இருக்கும் அதிகாரிகள் ஆய்வு செய்து சொன்ன பிறகே, அது என்ன விலங்கு என்று தெரியவரும் என்றார்கள்.

இதையடுத்து, பல்வேறு கோணங்களில் விசாரணை ஆரம்பமானதுடன், கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அவசர அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டிருந்தார்.

Vellore news and villagers panic due to movement of leopards in the Streets

அதில் "ஊனை மோட்டூர் பகுதியில் விலங்கு நடமாட்டம் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம், வீட்டிலே உஷாராக இருக்க வேண்டும். மேலும் கிராமத்தில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, விலங்கின் நடமாட்டத்தை கண்காணிக்கப்படும்" என்று கூறியிருந்தார்..

என்ன விலங்கு: மேலும், தொடர்ந்து கிராமத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.. 12 பேர் கொண்ட குழு அந்த கிராமத்தில் இரவு முழுவதும் ரோந்து பணியிலும் ஈடுபட்டனர். எனினும், அந்த மிருகம் பூனையா? நாயா? சிறுத்தையா? எதுவும் உறுதியாக தெரியவில்லை.. பூனையை வேட்டையாடும் இந்த வீடியோ மட்டும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+