வேலூர் ஜெகலட்சுமி சிக்கிட்டாங்க.. தென்னந்தோப்பில் காதல் மனைவி செய்த காரியம்.. வாழ்நாள் சான்றிதழ் வேற
வேலூர்: கணவருக்கு தெரியாமல் காதல் மனைவி செய்த காரியம், வேலூரில் அதிர்ச்சியை தந்துள்ளது.. இதுகுறித்த விசாரணையும் நடந்து வருகிறது.
சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், வெளிநாட்டிற்கு சென்ற கணவர் பெயரில் போலியாக வாழ்நாள் சான்றிதழ் பெற்று 8 ஏக்கர் தென்னந்தோப்பை ரூ.85 லட்சத்துக்கு விற்பனை செய்த காதல் மனைவியை போலீசார் கைது செய்தனர்.

காதல்: சென்னை ஆலந்தூரை சேர்ந்தவர் ரகுவீரபாண்டியன்.. 53 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் கெஜலட்சுமி.. 49 வயதாகிறது.. இவர்கள் இருவருமே அமெரிக்காவில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்தவர்கள். அப்போதுதான் ஜெகலட்சுமிக்கும், ரகுவீரபாண்டியனுக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவருமே திருமணமும் செய்துள்ளனர்.. இப்போது, இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள்..
கடந்த சில வருடங்களுக்கு முன் தம்பதி இருவரும், வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்த சின்னதாமன்சேரி பகுதியில் 8 ஏக்கர் 11 சென்ட் தென்னந்தோப்பு நிலத்தை வாங்கியிருக்கிறார்கள்.
மனஸ்தாபம்: அப்போது நிலம் இவர்கள் இருவரின் பெயரிலுமே வாங்கப்பட்டுள்ளது. பிறகு, தம்பதி இருவரும் மனஸ்தாபம் காரணமாக பிரிந்துவிட்டனர்.. இதற்கு பிறகு ரகுவீரபாண்டின் அமெரிக்காவிலும், கெஜலட்சுமி சென்னையிலும் வேலை பார்த்து வந்தார்கள்.. இருவருமே டைவர்ஸ் கேட்டு சென்னை ஹைகோர்ட்டை நாடியிருப்பதாகவும் தெரிகிறது.
இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள ரகுவீரபாண்டியன் பெயரில், கெஜலட்சுமி போலியாக வாழ்நாள் சான்றிதழ் சென்று, அந்த 8 ஏக்கர் 11 சென்ட் தென்னந்தோப்பை ரூ.85 லட்சத்துக்கு விற்பனை செய்துவிட்டதாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு இந்தியா வந்தபோதுதான், ரகுவீரபாண்டியன் இதுகுறித்து தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்து, வேலூர் எஸ்பி ஆபீசில் புகார் சொல்லி உள்ளார்..
நிலம் விற்பனை: எனவே, போலீசாரும் இந்த புகார் தொடர்பாக விசாரிக்க தொடங்கினார்கள்.. இறுதியில், ஜெகலட்சுமி செய்த மோசடி, உண்மை என்று தெரியவந்தது.. இதையடுத்து, சத்துவாச்சாரியில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த கெஜலட்சுமியை போலீசார் அதிரடியாக கைது செய்து செய்திருக்கிறார்கள். அமெரிக்காவில் உள்ள கணவர் பெயரில் போலி சான்றிதழ் பெற்று, ரூ.85 லட்சத்துக்கு நிலத்தை விற்ற இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை தந்து வருகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications