குடியாத்தம் லாட்ஜ்ஜில்.. இரவில் எகிறி தப்பி ஓடியது யார்? அப்ப விடுதி இவருடையதா? வேலூரில் விபச்சாரம்
வேலூர்: வேலூர் விபச்சாரத்தில் சிக்கிய நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.. குடியாத்தம் நகரில் இரவிலும் தொடர்ந்த திடீர் ரெய்டுகளால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது. என்ன நடந்தது வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில்?
பெரிய கம்பெனிகளில், நல்ல சம்பளத்தில் கவுரவமான வேலையை வாங்கித்தருவதாக ஆசை வார்த்தைகளை சொல்லியும், சினிமாவில் சான்ஸ் தருவதாக சொல்லியும், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த இளம்பெண்களை தமிழகத்துக்கு அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் சம்பவங்களும் அடிக்கடி அரங்கேறிக்கொண்டே இருக்கின்றன.

விபச்சாரம்: அதேபோல, பாலியல் தொழில் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், எத்தனையோ பெண்களை ரிசார்ட்கள், ஓட்டல்களில் தங்கவைத்து, விபச்சாரம் நடப்பதும் அரங்கேறிக்கொண்டே இருக்கின்றன.
பெரும்பாலும் படித்த பட்டதாரிகளும்கூட, இதுபோன்றவர்களின் ஆசைவார்த்தைகளில் விழுந்து, பாலியல் தொழிலில் தள்ளப்பட்டு விடுகிறார்கள்.. தங்கள் குடும்ப சூழல் கருதி, உயிருக்கு பயந்து கொண்டு, சென்னையில் விபச்சார கும்பல்களிடம் சிக்கி கொண்டுள்ளனர்.
அப்பாவி பெண்கள்: அதனால்தான், பெருகிவரும் இந்த விபச்சாரத்தை கட்டுப்படுத்த போலீசார் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்... மேலும், விபச்சாரம் நடக்கும் இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டு, அங்கு சிக்கி உள்ள பெண்களை பத்திரமாக மீட்டும் வருகிறார்கள்.. கட்டாயப்படுத்தி விபச்சார தொழிலில் ஈடுபடுத்தி பணம் சம்பாதிக்கும் குற்றவாளிகளையும் போலீசார் கைது செய்து கொண்டே இருக்கிறார்கள்.
தங்களுக்கு கிடைக்கும் ரகசிய தகவலின் அடிப்படையில் லாட்ஜ்கள் , ரிசார்ட்கள், ஹோட்டல்களில் திடீர் திடீர் சோதனைகளை நடத்தி, பாலியல் புரோக்கர்களையும் கைது செய்து வருகிறார்கள்..
கோவை பகீர்: கடந்த வாரம்கூட, கோவையில் 8 ஸ்டார் ஓட்டல்களில், வெளிநாட்டு பெண்களை பிளைட்டில் அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்திய, 2 முக்கிய நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.. அங்கிருந்த பெண்களையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இப்போது வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில், தங்கள் அதிரடியை காட்டியுள்ளனர் போலீசார்.. குடியாத்தத்தில் உள்ள ஒரு லாட்ஜில், ஆந்திரா, கேரளா மாநில பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக எஸ்பி அலுவலகத்திற்கு புகார் வந்தது... இதையடுத்து, எஸ்பி மதிவாணன் உத்தரவின்பேரில் குடியாத்தம் டவுன் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார், நேற்றிரவு இந்த சோதனையை மேற்கொண்டனர்.
குடியாத்தம்: குடியாத்தம் நகரில் உள்ள பல்வேறு லாட்ஜ்களில் இந்த திடீர் சோதனை நடத்தப்பட்டது.. அப்போது, குடியாத்தம் பஸ் நிலையம் பின்புறமுள்ள லாட்ஜிலும் சோதனை நடத்தப்பட்டது.. அப்போது, அங்கே விபச்சாரம் நடப்பதும் உறுதியானது. பாலியல் தொழிலில் ஈடுபட்டவர்களையும் போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.
இதைத்தொடர்ந்து லாட்ஜ் மேனேஜர், பாலியல் தொழிலில் ஈடுபட்ட 6 பெண்கள் உட்பட 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கைதான 6 பெண்களிடம் குடியாத்தம் மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராணி விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்..
எகிறி தப்பி ஓட்டம்: அமமுக மாவட்ட செயலாளர் சதீஷுக்கு இந்த லாட்ஜ் சொந்தமானது என்கிறார்கள்.. போலீசார் இரவு நேரத்தில் இங்கு திடீரென சோதனையில் ஈடுபட்டதுமே, மற்ற லாட்ஜ்களில் உள்ளவர்கள் உஷாராகிவிட்டார்களாம்..
இதனால், அந்தந்த லாட்ஜ்களில் பாலியல் தொழிலில் ஈடுபட்டவர்கள் உடனடியாக ரூம்களை காலி செய்து கொண்டு, நள்ளிரவு நேரத்திலும் தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது. அவர்கள் எல்லாம் யார் என்று தெரியவில்லை.. குடியாத்தம் போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.
நேற்று மதுரை திருமங்கலத்திலும் பாலியல் புரோக்கர்கள் கைதாகி உள்ளனர்.. திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அருகே பாரதி தெருவில் ஆயுர்வேதிக் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதாக வந்த தகவலை அடுத்து போலீசார் விசாரித்தனர். இதற்காகவே போலீசார் மசாஜ் செய்வதுபோல, அந்த பார்லருக்குள் சென்றுள்ளனர்.
அப்போது மசாஜ் செய்ய ரூ. 1500 மட்டும் செலுத்த வேண்டும், மற்ற விவரங்களுக்கு அறைக்குள் தனியாக பணம் கொடுக்க வேண்டும் எனவும், வரவேற்பு அறையில் இருந்த பெண் தெரிவித்துள்ளார். அப்போதுதான் அங்கு இதையடுத்து விபச்சாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது.,,விபச்சாரத்தில் ஈடுபட்ட 2 பெண்கள், மதுரை நபர் ஒருவரையும் போலீசார் கைது செய்தனர். சென்டர் நடத்திய பெண், அவரது கணவர் ஆறுமுகத்தை போலீசார் தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications