வேலூர் டூ ராணிப்பேட்டை.. சென்னை, காஞ்சிபுரம் ரேஷன் கடைகளில் பார்த்தீங்களா? சபாஷ் தமிழக அரசு
வேலூர்: தமிழகத்தில் பெரிய வெங்காயம், தக்காளி வரத்து குறைந்துள்ள நிலையில், வெளிச்சந்தையில் பெரிய வெங்காயம் மற்றும் தக்காளி விலை அதிகமாகவே உயர்ந்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில், தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே, தக்காளி வெங்காயத்தின் விலை உயர்ந்து வருகிறது.. தக்காளி விலை ஒரு கிலோ 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதுவே சில்லறை கடைகளில் 100 முதல் 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது..

தக்காளி: அதேபோல, 2 மாதங்களுக்கு முன்பு வெங்காயத்தின் விலை ஒரு கிலோ 30 முதல் 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இப்போது ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.100ஐ தாண்டி செல்கிறது.
இந்த வெங்காய விலை உயர்வுக்கு காரணம், மஹாராஷ்டிரா, ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் அளவுக்கு அதிகமான மழைப்பொழிவு என்கிறார்கள். மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கும் அனுமதி கொடுத்ததால், இந்த விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, வெங்காயம், தக்காளி இவைகளின் விலை இனியும் உயரக்கூடும் என்கிறார்கள் வியாபாரிகள்.
பண்ணை பசுமை: எனவேதான், தமிழ்நாடு கூட்டுறவு சொசைட்டி மூலம் இயங்கும் பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி, வெங்காயம் மற்றும் காய்கறிகள் விற்பனையை துவங்கியிருக்கிறது. ஒரு கிலோ பெரிய வெங்காயம் 40 ரூபாய்க்கும், ஒரு கிலோ தக்காளி 49 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஆனால், இவை இரண்டுமே, ஒரு நபருக்கு அதிகபட்சம், 2 கிலோ மட்டுமே வழங்கப்படுகிறது...

சில்லறை கடைகளை விட சரிபாதி அளவுக்கு அரசு கூட்டுறவு சங்கமான பண்ணைப் பசுமை நுகர்வோர் கடையில் விலை குறைந்து காணப்படுவதால், இல்லத்தரசிகளுக்கு, அரசின் இந்த ஏற்பாடு மிகுந்த உபயோகமாக இருந்து வருகிறது.
பெரிய வெங்காயம்: தற்போது வெளிச்சந்தையில் பெரிய வெங்காயம் மற்றும் தக்காளி விலை உயர்ந்துள்ளது. கிலோ, 70 - 80 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன... இதனால், சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு அங்காடிகள் மற்றும் அம்மாவட்டங்களில் முக்கிய இடங்களிலுள்ள ரேஷன் கடைகளில், பெரிய வெங்காயம் கிலோ 40 ரூபாய்க்கு விற்கின்றன.
இதற்காக, தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பிடம், 30 டன் வெங்காயத்தை, கூட்டுறவு துறை கடந்த வாரம் வாங்கியிருந்தது.. இதைத்தவிர, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்ட விவசாயிகளிடம் இருந்தும் தக்காளி வாங்கப்பட்டது. அந்தவகையில், கிலோ 50 முதல் 55 ரூபாய் வரை தக்காளி விற்கப்பட்டு வருகிறது..
கோரிக்கை: எனினும், சங்கங்கள் ஏற்கனவே நஷ்டத்தில் உள்ளதால், விலை கட்டுப்பாடு நிதியத்திலிருந்து நிதி வழங்கினால், முக்கிய நகரங்களில் அனைத்து ரேஷன் கடைகளிலும் பெரிய வெங்காயம், தக்காளி விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோரிக்கைகள் வலுக்க துவங்கியிருக்கின்றன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications