வேலூர் சார் பதிவாளர் ஆபீசில்.. இரவில் நுழைந்தது யார் பாருங்க.. கரண்ட் வேற போயிருச்சு.. மலைத்த காட்பாடி
வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் இரவு நேரத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது.. என்ன நடந்தது?
வேலூர் மாவட்டம், காட்பாடியில் செயல்பட்டுவரும் சார் பதிவாளர் அலுவலகத்தில் தினமும் நிலம் மற்றும் வீட்டுமனைகள் தொடர்பாக 100க்கும் மேற்பட்ட பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன..

இந்த சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்வதற்கு ஒரு சில அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக பல்வேறு புகார்கள் தொடர்ந்து வந்தவண்ணம் இருந்தது.. 2 நாட்களுக்கு முன்புகூட காட்பாடி சார்பதிவாளர் அலுவலக உதவியாளர் சிவக்குமார் சிக்கினார்.
வீட்டுமனைகள்: அரசுக்கு சொந்தமான 8 ஏக்கர் புறம்போக்கு நிலத்தையும், 73 சென்ட் புறம்போக்கு நிலத்தையும் பலருக்கும் போலியான ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளதும், அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளையும் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளதும் தணிக்கையின்போது தெரிய வந்தது.
இந்த காட்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் வெறும் 10 நாட்கள் பொறுப்பு சார்பதிவாளராக பதவி வகித்தபோதும் பல்வேறு முறைகேடுகளில் சிவக்குமார் ஈடுபட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே இவரை, பத்திரப்பதிவு ஐஜி ஆலிவர் பொன்ராஜ் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டிருந்தார்.
அடுத்த பரபரப்பு: இந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளேயே அடுத்த பரபரப்பு இதே அலுவலகத்தில் நடந்துள்ளது.. வேலூர் விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசார் திடீரென 7.30 மணியளவில் காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்திற்குள் நுழைந்தார்கள்.
வெளிப்புற வாசல் கதவு மற்றும் அலுவலக கதவுகளை அதிரடியாக இழுத்து மூடி பூட்டினார்கள்.. இதனால் சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள், ஊழியர்கள், பத்திரப்பதிவு முகவர்கள் மற்றும் பத்திர பதிவு செய்ய வந்த நபர்கள் உட்பட பலர் வெளியே வரமுடியாமல் சிக்கிக்கொண்டார்கள்..
முறைகேடு ஆவணங்கள்: அறைகளில் பணம் ஏதேனும் இருக்கிறதா? முறைகேடான ஆவணங்கள் உள்ளதா? நேற்று எத்தனை பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டது? என்பது குறித்தெல்லாம் விஜிலென்ஸ் போலீசார் சல்லடை போட்டு துழாவினார்கள்.. அலுவலகம் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களிலும் ஏதேனும் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து சோதனை நடத்தினர்.
அந்த நேரத்தில் மழை காரணமாக காட்பாடியில் கரண்ட் போய்விட்டது.. ஆனாலும் கரண்ட் வந்தபிறகு மறுபடியும் போலீசார் சோதனையை தொடர்ந்தனர்.. அப்போது கணக்கில் வராத 2.14 லட்சத்தை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. நைட் நேரத்தில் நடந்த ரெய்டு பெரும் பரபரப்பை வேலூர் மாவட்டத்தில் ஏற்படுத்திவிட்டது.












Click it and Unblock the Notifications