வேலூரில் இரண்டாவது கள்ளக்காதலன் முதல் காதலனுக்கு அனுப்பி வைத்த பியூட்டிஷியன் போட்டோ.. திகைத்த கணவர்
வேலூர்: கள்ளக்காதல் சம்பவங்கள் பெருகி வருவதுடன், விவாகரத்துகள், வன்முறைகள் நிகழ்வுகளும் அதிகரித்தபடியே வருகின்றன.. பச்சிளம் குழந்தைகளையே, பெற்ற தாய்மார்கள் மனசாட்சியின்றி கொல்கிறார்கள் என்றால், கட்டிய கணவனையும், மனைவியையும் ஈவிரக்கமின்றி கொன்று விடுகிறார்கள். கள்ளக்காதல் மரணங்களின் எண்ணிக்கை இப்படி உயர்ந்து வருவது பொதுமக்களை கவலை கொள்ள செய்து வருகிறது.. இந்நிலையில், வேலூரில் 2 கள்ளக்காதல்கள் செய்த ஒரு பெண்ணின் நிலைமை என்ன ஆனது தெரியுமா?
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் வசித்து வருபவர் ரம்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).. இவருக்கு 31 வயதாகிறது.. பியூட்டிஷியன் படித்துள்ளார்.. ரம்யாவுக்கு திருமணமாகிவிட்டது.. 2 குழந்தைகளும் உள்ளனர்.

பியூட்டிஷியன் கள்ளக்காதல்
அழகுகலை நிபுணர் என்பதால், பியூடிஷியன் பயிற்சி குறித்து தன்னுடைய இன்ஸ்டாவில் பதிவிட்டு வந்தார்.. மேலும் அழகுகலை குறித்த வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார்.. இவரது இன்ஸ்டா வீடியோக்களுக்கு ஏராளமான வியூவர்ஸ் உண்டு.
அந்தவகையில், இன்ஸ்டாகிராமில் காட்பாடி பகுதியை சேர்ந்த யுவராஜ் என்ற 30 வயது நபர் அறிமுகமானார்.. வீடியோக்களுக்கு கமெண்ட்களை பதிவிட்டு, நாளடைவில் ரம்யாவுடன் நட்பை ஏற்படுத்தி கொண்டார்.. இருவரும் போனில் பேசி வந்த நிலையில், கள்ளக்காதல் மலர்ந்துள்ளது.. இருவரும் உல்லாசமாகவும் இருந்துள்ளனர்.
முதல் கள்ளக்காதலன்
அப்போது யுவராஜூடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகளை தன்னுடைய செல்போனில் போட்டோ எடுத்து வைத்திருந்தாராம் ரம்யா.
இந்நிலையில் ரம்யாவுக்கு 34 வயதுடைய விக்ரம் என்பவருடனும் நட்பு ஏற்பட்டுள்ளது.. இந்த நட்பு கள்ளக்காதலாக மாறியிருக்கிறது.. ஒருநாள் ரம்யாவின் செல்போனை யதேச்சையாக பார்த்துள்ளார் விக்ரம்.. அப்போது யுவராஜூடன் நெருக்கமாக இருந்த போட்டோக்களை செல்போனில் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்..
உடனே அந்த போட்டோக்களை ரம்யாவுக்கு தெரியாமல் தன்னுடைய செல்போனில் அனுப்பிக் கொண்டுள்ளார் யுவராஜ்.. ஆனால், அதற்கு பிறகும் ரம்யாவுடன் இயல்பாகவே பேசி வந்துள்ளார்.. ரம்யாவின் உண்மை முகத்தை தெரிந்து கொண்ட யுவராஜ், அவரிடம் பணம், தங்க நகைகளை செலவுக்காக கேட்டு பெற துவங்கினார்..
இரண்டாவது கள்ளக்காதலன்
ரம்யாவும் கேட்ட நேரத்தில் யுவராஜூக்கு பணம், நகைகளை தந்து வந்தார்.. இந்த விஷயம், ரம்யாவின் கணவருக்கு தெரிந்துவிட்டது.. விக்ரம் என்பவருக்கு தன்னுடைய மனைவி, பணம், நகைகளை தந்து வருவதை அறிந்த கணவர், விக்ரமை தட்டிக்கேட்டுள்ளார்... மேலும், இதுவரை ரம்யா தந்த நகை, பணத்தை திருப்பி தரும்படியும் கேட்டுள்ளார்.. இதனால் விக்ரமுக்கும், கணவருக்கும் இடையே தகராறு வெடித்தது.. ஒருகட்டத்தில் பொறுமையிழந்த கணவர், விக்ரம் மீது பரதராமி போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார்.
போலீசாரும் இந்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து விக்ரமை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.. இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு விக்ரம் ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார்..
மீண்டும் ஜெயில்
தன்னை ஜெயிலுக்கு அனுப்பிய ரம்யா மற்றும் அவரது கணவர் மீது கடும் ஆத்திரத்தில் இருந்த விக்ரம், ரம்யாவும், யுவராஜூம் நெருக்கமாக இருந்த போட்டோக்களை, ரம்யாவுக்கே அனுப்பி வைத்தார்.. பிறகு, ரம்யாவை மிரட்டி பணமும் கேட்டுள்ளார்..
அப்போதுதான் அந்த போட்டோக்களை பார்த்து அதிர்ச்சியடைந்த ரம்யா, உடனே இதுகுறித்த பேரணாம்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விக்ரமை கைது செய்து, மறுபடியும் ஜெயிலில் அடைத்துள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications