வேலூரில் ஸ்டேட் பேங்க் ஏடிஎம் வாசலில் ஓடி வந்த நபர்! ஸ்கேனரை லேசா காட்டியதுமே? ஆடிப்போன SBI கஸ்டமர்
வேலூர்: வேலூர் சைபர் கிரைம் போலீஸார் தொடர்ந்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியபடியே உள்ளனர்.. வங்கி பெயரில், ஆன்லைன் மோசடிகள் அதிகரித்துள்ள நிலையில், விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டும்கூட, சில அப்பாவிகள் ஏமாந்து விடுகிறார்கள்.. இப்போதுகூட வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் ஒரு மோசடி நடந்துள்ளது. இது தொடர்பான விசாரணையை போலீசாரும் மேற்கொண்டு வருகிறார்கள்.
தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார், சில நாட்களுக்கு முன்பு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தனர்.

அதில், "சைபர் குற்றப் பிரிவின் அதிகாரப்பூர்வ பெயர் மற்றும் லோகோவை பயன்படுத்தி, சில நேர்மையற்ற நபர்கள், போலி சமூக ஊடக கணக்குகளை உருவாக்கி வருவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட போலி கணக்குகள், அதிகாரப்பூர்வ கணக்குகளை ஒத்த பெயர்களையும், அரசின் லோகோக்களையும் பயன்படுத்துவதன் மூலம், மக்களை தவறாக வழிநடத்தப்படுகின்றனர்.
தமிழ்நாடு சைபர் குற்றப்பிரிவுக்கு, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளம் ஆகியவற்றில் தலா ஒரு கணக்கு, அதாவது @tncybercrimeoff என்ற கணக்கு மட்டுமே இருப்பதால், போலி கணக்குகள் மூலம் வெளியிடப்படும் தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம்..
ஆன்லைனில் ஏமாற்றம்
ஆன்லைனில், அரசுத் துறைகளைச் சேர்ந்தவை என கூறப்படும் தகவல் தொடர்புகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இருக்க வேண்டும்.. எந்த ஒரு சமூக ஊடக கணக்கிலிருந்து வரும் செய்திகளுக்கும் பதிலளிப்பதற்கு முன், அதன் நம்பகத்தன்மையை சரிபார்க்க வேண்டும்.
ஆதார் எண், வங்கி விவரங்கள்
சந்தேகத்திற்கிடமான கைப்பிடியில், ஆதார் எண், வங்கி விவரங்கள், ஓடிபி போன்ற தனிப்பட்ட தகவல்களை பகிர்வதை தவிர்க்க வேண்டும். அத்தகைய கணக்குகள் குறித்து உடனடியாக அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்" என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருநத்னர்.
இந்நிலையில், வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. குடியாத்தம் சுண்ணாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அருண்குமார்.. இவர் மகா சுவாதி தைலம் என்கிற தைலம் தாயரித்து விற்பனை செய்து வருகிறார்..
ஸ்டேட் பேங்க் வங்கி
இந்நிலையில், அருண்குமார் குடியாத்தம் ஸ்டேட் பாங்க் வங்கியில் பணம் செலுத்துவதற்காக இன்று சென்றிருக்கிறார்.. ஆனால், ஏடிஎம் சென்டரில் நீண்ட வரிசையில் ஏராளமானோர் நின்றிருந்தனர்.. அதனால் அருண்குமாரும் வரிசையில் சென்று நின்றுள்ளார்..
அப்போது டிப் டாப் உடை அணிந்துக்கொண்டு அவசரமாக வந்த நபர் ஒருவர், "என்னுடைய அம்மாவுக்கு உடம்பு சரியில்லை.. மருத்துவமனையில் சேர்த்திருக்கிறேன். அவசரமாக பணம் வேண்டும்.. நீங்கள் ஏடிஎம்மில் டெபாசிட் செய்யும் பணத்தை என்னிடம் கொடுங்கள்.. நான் உங்களுக்கு ஜிபே மூலம் பணம் அனுப்பிவிடுகிறேன்" என்று சொல்லி உள்ளார்.
ஸ்கேன் செய்த ரூ.10000
உடனே அருண்குமாரும் மனமிரங்கி, தான் டெபாசிட் செய்ய வைத்திருந்த பத்தாயிரம் ரூபாயை அந்த நபரிடம் தந்துள்ளார்.. உடனே அந்த நபரும் அருண்குமாரிடம், நம்பரை பதிவு செய்து ஜிபே மூலம் பணம் அனுப்ப லேட்டாகும், உங்களுடைய செல்போனில் உள்ள ஸ்கேனரை காட்டுங்கள், நான் இப்பவே ஸ்கேன் செய்து பணத்தை உங்களுக்கு அனுப்பி விடுகிறேன் என்று சொல்லி உள்ளார்.
அருண்குமாரும் தன்னுடைய செல்போனில் உள்ள ஸ்கேனரை காட்டி உள்ளார்.. அப்போது ஸ்கேன் செய்து பணம் அனுப்பியதற்கான ஆதாரத்தை அருண்குமாரிடம் காட்டி விட்டு அந்த நபர், அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டார்.
ஏடிஎம்மில் பணம்
பிறகு அருண்குமார் தன்னுடைய அக்கவுண்ட்டை பார்த்தபோது, பணம் வராதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.. உடனே பேங்க் மேனேஜரிடம் இது குறித்து கேட்டுள்ளார்.. பேங்க் மேனேஜரும் அருண்குமார் அக்கவுண்டை செக் பண்ணி பார்த்தபோது, பணம் எதுவும் வரவில்லை என்பதை உறுதிபடுத்தினார்.
அதற்கு பிறகுதான், தான் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பதை அறிந்து அருண்குமார் உடனே குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் தந்தார்.. அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் வேலூர் எஸ்பி ஆபீசிலும் புகார் தந்துள்ளார்.. இந்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், ஏடிஎம் வாசலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.
விழிப்புணர்வு செய்தி
தான் 10 ஆயிரம் ரூபாயை பறிகொடுத்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அருண்குமார், ஏடிஎம் செல்லும்போது அவரவர் பணத்தை அவரவர் எடுத்து கொள்ள வேண்டும்.. யாரிடமும் தந்து ஸ்கேன் செய்ய விடாதீர்கள்.. யாரிடமும் பின்நம்பரும் தந்துவிடாதீர்கள்" என்று விழிப்புணர்வுக்காக பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications