வேலூர் டூ அரக்கோணம்.. லீலைகள் முற்றி சிறை போன ஜாபர் சித்திக்! இப்ப அந்த மேட்டரும் வெளியே வந்துருச்சு
வேலூர்: வேலூர் மாவட்டத்தில், போலீஸ் அதிகாரியாக இருக்கும் ஒருவரின் குடும்ப பிரச்சினை, புகாராக மாறி இப்போது கைது வரை சென்றிருக்கிறது.. அதுவும் காதலித்து திருமணம் செய்த மனைவியே கணவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார். ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த டிஎஸ்பி ஜாபர் சித்திக்கை வேலூர் சிபிசிஐடி போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர். இந்த விவகாரத்தின் பின்னணியில் வேறு சில புகார்களும் இருப்பதுதான் இப்போது கவனத்தை ஈர்த்துள்ளது..!!!
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்தவர் ஜாபர் சித்திக். இவர் 2020-ம் ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று நேரடியாக டிஎஸ்பியாக செலக்ட் செய்யப்பட்டவர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஆகிய இடங்களில் டிஎஸ்பியாக பணியாற்றியிருக்கிறார்.. கடந்த 2024-ம் வருடம் அரக்கோணம் டிஎஸ்பியாகப் பொறுப்பேற்றார்.
அரக்கோணம் டிஎஸ்பி
அப்போது அரக்கோணத்தை சேர்ந்த ஐடி நிறுவன ஊழியரான ஷோபனாவைக் காதலித்து கல்யாணம் செய்துகொண்டார். ஆனால், கல்யாணத்துக்கு பிறகு, கருத்து வேறுபாடு காரணமாக 2 பேருக்கும் நிறைய தகராறுகள் வந்துபோனதாக தெரிகிறது..
காரணம், ஜாபர் சித்திக் பல பெண்களுடன் தொடர்பில் இருந்தாராம்.. இதனால் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த ஷோபனா, கணவரிடம் நியாயம் கேட்டதற்கு, அடித்து துன்புறுத்தி விட்டதாக ஷோபனா குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அரக்கோணம் போலீஸ் ஸ்டேஷனிலும் ஷோபனா புகார் தந்தார்.. ஆனால், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்..
ஜாபர் சித்திக் பரமக்குடி டிஎஸ்பி
கடந்த ஜூலை 4-ம் தேதி ஜாபர் சித்திக் பரமக்குடி டிஎஸ்பியாக டிரான்ஸ் செய்யப்பட்டார். அங்கு அவர் பணியாற்றி வந்த நிலையில், கணவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஷோபனா வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடமும், தமிழக டிஜிபி மகேஷ் அகர்வாலிடமும் புகார் அளித்தார்.
இதையடுத்து, இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. வேலூர் சிபிசிஐடி போலீசார் கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி ஜாபர் சித்திக் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, ஆகஸ்ட் 21-ம் தேதி அவரை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்பிறகு இந்தப் புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணைக்கு ஆஜராகும்படி ஜாபர் சித்திக்குச் சம்மன் அனுப்பப்பட்டது.. எனவே வேலூர் சிபிசிஐடி ஆபீசில் நேற்றுமுன்தினம் காலை ஆஜரான அவரிடம் போலீசார் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர்கள்.. விசாரணை முடிவில், அவரைக் கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, நேற்று வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
வேலூர் சிறை சென்ற ஜாபர்
இந்நிலையில், ஜாபர் சித்திக் அரக்கோணத்தில் டிஎஸ்பியாகப் பணியாற்றியபோது, சில சர்ச்சைகளில் சிக்கியதாக புகார்கள் வெளியாகியுள்ளன. அதாவது, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களை அலைக்கழித்ததாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டதாகவும் புகார்கள் வெடித்துள்ளன.. இருந்தாலும் இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பான அதிகாரப்பூர்வ விசாரணை முடிவுகள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
அதேபோல், கடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலின்போது திமுகவினருக்குச் சாதகமாக ஜாபர் சித்திக் செயல்பட்டதாக, அப்போது அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் எம்எல்ஏ சு. ரவி தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்ததாக மற்றொரு தகவல் உலா வருகிறது..
அம்பலமான லீலைகள்
ஜாபர் சித்திக்கின் மனைவி ஷோபனா அரக்கோணத்தை சேர்ந்தவராம்.. அவரது அம்மா, திமுக கவுன்சிலராகவும் இருந்தவர்... இந்த அரசியல் பின்னணி காரணமாகத்தான், திமுக ஆட்சியில் அரக்கோணம் டிஎஸ்பி-யாக இருந்த ஜாபர் சித்திக் பல்வேறு அநியாயங்களை செய்ததாக சொல்கிறார்கள்.
இப்படி மனைவி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சஸ்பெண்ட் நடவடிக்கையும் எடுக்கப்பட்ட நிலையில், இப்போது ஜாபர் சித்திக் கைது செய்யப்பட்டுள்ளார்.. ஜாபர் ஜெயிலுக்கு சென்ற நிலையில், ஒவ்வொரு புகார்களும், குற்றச்சாட்டுகளும் மீண்டும் இணையத்தில் வட்டமடித்து வருவது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...!!


Click it and Unblock the Notifications
