வாணியம்பாடி தெய்வானைக்கு வந்ததே கோபம்.. வேலூரில் வீடு புகுந்து மாமியாருக்கு மறக்க முடியாத சம்பவம்
வேலூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கணவருக்கு மாமியார் உறுதுணையாக இருப்பதாக வீட்டுக்குள் நுழைந்து மாமியாரை மருமகள் தலை முடியை பிடித்து இழுத்து போட்டுள்ளார். இருவருக்கும் இடையே நடந்த சம்பவங்கள் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கணவன் மனைவி இடையே சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட இன்றைக்கு சண்டை அதிகமாக வருகிறது.ஏன் சண்டை போடுகிறார்கள். என் கருத்து வேறுபாடுகளால் பிரிந்து விடுகிறார்கள் என்று பார்த்தால் முதல் இடத்தில் அவர்களது ஈகோ இருக்கும். இரண்டாவது இடத்தில் அவர்களது குடும்பம் இருக்கும். பெண் என்பவள் தனது தாயாரின் பேச்சுக்களை கேட்டு கணவன் குடும்பத்தினரை சந்தேகத்துடன் பார்ப்பது, குடும்பத்தை பிரிக்க நினைப்பது போன்ற சம்பவங்கள் பல பிரச்சனைகளுக்கு காரணமாக உள்ளது.

என்ன பிரச்சனை
அதேபோல் கணவனும் தனது அம்மாவின் பேச்சைக்கேட்டு பெண் மற்றும் பெண் வீட்டாரை நடத்தும் விதத்தாலும் சிக்கல்கள் பல வருகிறது. கணவன் மனைவி சண்டைக்கு பொதுவாக இரண்டு பேருக்குமே அவர்களுடைய மாமியார் காரணமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. மாமியார் மருமகன் இடையே பிரச்சனைகள் பெரியதாக வருவது இல்லை..
மாமியார் மருமகள்
ஆனால் மாமியார் மருமகள் இடையே சண்டை என்பது எப்போதுமே வருகிறது.யாருடைய கட்டுப்பாட்டில் ஆண் இருக்க வேண்டும் என்ற அந்த சண்டையில் யார் ஜெயிக்கிறார்களோ, அவர்களே அந்த வீட்டை ஆளுகிறார்கள். இப்போது பிரச்சனைக்கு வருவோம்.வாணியம்பாடி பகுதியில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
வாணியம்பாடி மருமகள்
திருப்பத்தூர் மாவட்டம்.வாணியம்பாடி அடுத்த கணவாய் புதூர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் இவர் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி தெய்வானை. இவர்களுக்கு 4 பெண் பிள்ளைகள் உள்ளார்கள். தெய்வானை சமூக வலைதளங்கள் மற்றும் செல்போனில் அதிக நேரம் செலவிடுவதாகவும் குடும்பத்தை சரியாக கவனிப்பதில்லையெனக்கூறி அவரது கணவர் செல்வம் விவகாரத்து கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறார்.
மாமியார் மீது கோபம்
இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் செல்வத்திற்கு அவரது தாயார் உறுதுணையாக செயல்படுவதாக தெய்வானைக்கு மாமியார் மீது கோபம் இருந்துள்ளது. இந்நிலையில் செல்வத்தின் வீட்டிற்கு சென்று தனது மாமியார் மாணிக்கம்மாளை வீடு புகுந்து சரமாரியாக தாக்கி குடுமிபிடி சண்டையிட்டுள்ளார், இதுகுறித்தான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. செல்போனில் அதிக நேரம் செலவிடும், மனைவியை பிரிய விவாகரத்து கோரிய கணவனின் தாயாரை மருமகள் சரமாரியாக தாக்கிய சம்பவம் வாணியம்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications