வேலூர் இப்ராஹிம் ஓபனா கேட்டுட்டாரு.. 18% ஓட்டு வங்கி வைத்து என்ன பயன்? திமுகவுக்கு உதவுகிறாரா விஜய்
வேலூர்: விஜய் யாருடன் கூட்டணி வைப்பார் என்ற எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.. குறிப்பாக பாஜகவுடன் விஜய் கூட்டணி வைக்கக்கூடும் என்ற அரசல் புரசலான பேச்சும் அரசியல் களத்தில் வலம் வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் பாஜக சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ள கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏவும், தற்போதைய பாஜக பெண் நிர்வாகியுமான விஜயதரணி, சமீபத்தில் ஒரு சேனலுக்கு பேட்டி தந்திருந்தார்.

அதில் விஜய் பற்றி பேசும்போது, "திமுகவை அரசியல் எதிரி என்கிறார் விஜய், ஆனால் அவர் புதிதாக இளைஞர்கள் விரும்பக்கூடிய ஒரு நபராக வந்துள்ளார்..
கொள்கை எதிரி பாஜக
கொள்கை எதிரி என்றுதான் விஜய் பாஜகவை சொல்கிறார். கொள்கைக்கு அப்பாற்பட்டு எவ்வளவோ கூட்டணி அமைந்துள்ளது.. மகாராஷ்டிராவில் அமையாத கூட்டணியா? கொள்கை எதிரி சொல்றாங்க எவ்வளவோ கொள்கைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு சிவசேனாவும் காங்கிரசும் ஒன்றாக சேரவில்லையா? நிதிஷ்குமாரும் பாஜகவும் ஒன்றாக சேரவில்லையா?'' என்று கேட்டிருந்தார் விஜயதாரணி.
அதேபோல பாஜக அனைத்து பிரிவு மாநில இணை அமைப்பாளர் நாச்சியப்பன் கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசும்போது, "என்டிஏ கூட்டணிக்கு தவெக தலைவர் விஜய் வருவாரா மாட்டாரா என்று இப்போது சொல்ல முடியாது. போகப்போக விஜய், என்டிஏ கூட்டணிக்கு வருவதற்கு வாய்ப்புள்ளது" என்று கூறியிருந்தார்.
வேலூர் இப்ராஹிம்
இப்படிப்பட்ட சூழலில், திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கம் உண்மையாக இருந்தால், பாஜக தலைமையிலான கூட்டணியில் தவெக தலைவர் விஜய் இணைய வேண்டியது அவசியம் என்று பாஜக சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் பகிரங்கமாகவே தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளில் நடைபெற்ற பாஜக பயிலரங்கில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் இப்ராஹிம் பேசினார்..
அப்போது, "நடிகர் விஜய் இதுவரை கவுன்சிலர் தேர்தல்கூட சந்திக்காதவர். அதே நேரத்தில், பாஜக தற்போது 20 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. இப்படியான சூழலில், விஜய் தொடங்கியுள்ள புதிய கட்சியையும், பாஜகவையும் ஒப்பிட்டு பேசுவது பொருத்தமற்றது.. அதனை வன்மையாக கண்டிக்கிறோம்.
18 சதவீதம் ஓட்டு வங்கி
விஜயை பாஜக எதிர்பார்த்து காத்திருக்கவில்லை.. ஆனால் திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தால், தனித்து நின்று அதை செய்ய முடியாது என்பது அவருக்கும், அவரது கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றாகவே தெரியும்.. தவெகவுக்கு 15 முதல் 18 சதவீதம் வரை வாக்குகள் இருப்பதாக பேசப்படுகின்ற நிலையில், அந்த அளவிலான வாக்கு சதவீதத்தை வைத்து திமுகவை தோற்கடிக்க முடியுமா? என்ற கேள்வி எழுகிறது.
தவெக தனித்து போட்டியிட்டால், அது வாக்குகளை பிரிப்பதற்கும், மறைமுகமாக திமுக வெற்றிக்கு உதவுவதற்குமே வழிவகுக்கும்.. அதனால் திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கம் இருந்தால், அதிமுக, பாஜக ஆகியவை இணைந்த வலுவான கூட்டணியில் விஜய் சேர வேண்டியது அவசியம்..
விஜய்க்கு ஒரு எம்பி பதவி
இதை தவிர்த்து, வழக்கம்போல் திமுகவை வீழ்த்த வேண்டும் என்று மட்டுமே விஜய் சொல்லிக் கொண்டிருந்தால், இந்தத் தேர்தலோடு அவரது அரசியல் பயணம் முடிவுக்கு வரும்.. , கமல்ஹாசன் சந்தித்த நிலையே விஜய்க்கும் ஏற்படும்..
வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தவெக தலைவர் விஜய்க்கு திமுக ஒரு எம்.பி. பதவி வழங்கும்" என்றெல்லாம் வேலூர் இப்ராஹிம் கூறியிருக்கிறார்.
-
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ்












Click it and Unblock the Notifications