வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வந்தது யார்.. துரைமுருகன் வீட்டில் நள்ளிரவு பெரும் கலாட்டா.. நடந்தது என்ன?

Google Oneindia Tamil News

Recommended Video

    Raid in Duraimurugan house | துரைமுருகன் வீட்டில் ரெய்டு, தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு

    வேலூர்: திமுக பொருளாளர் துரைமுருகனின், வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள இல்லம் மற்றும் அவருக்கு சொந்தமான பொறியியல் கல்லூரியில் அதிகாலை முதல் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    வேலூர் தொகுதியில் திமுக சார்பில் அதன் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். இதேபோல அதிமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சி தலைவர் ஏசி சண்முகம் போட்டியிடுகிறார்.

    வேலூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு தீவிரமாக பணப்பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் பட்டுவாடா நடைபெறுவதாக வருமானவரித் துறை மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது.

    துரைமுருகன் வீட்டிலிருந்து கட்டுக்கட்டாக ஆவணங்கள்.. ரூ.10 லட்சம் பறிமுதல் துரைமுருகன் வீட்டிலிருந்து கட்டுக்கட்டாக ஆவணங்கள்.. ரூ.10 லட்சம் பறிமுதல்

     நள்ளிரவு சோதனை

    நள்ளிரவு சோதனை

    இந்த நிலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு சுமார் 12 மணியளவில் துரைமுருகனின் காட்பாடி இல்லத்திற்கு அதிகாரிகள் குழு ஒன்று சென்று தங்களை வருமானவரித்துறை அதிகாரிகள் என்று அறிமுகம் செய்துள்ளது.

    இதையடுத்து துரைமுருகன் தனது வழக்கறிஞர்களுக்கு போன் செய்து உடனே வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். அவர்கள் வந்து சோதனையிட வந்ததாக கூறிய அதிகாரிகளிடம் அடையாள அட்டையை வாங்கி சோதித்து பார்த்துள்ளனர். அதில் தேர்தல் அதிகாரிகள் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

     வந்தது யார்

    வந்தது யார்

    எனவே வந்திருந்தது வருமான வரித்துறை அதிகாரிகளோ அல்லது தேர்தல் செலவின பார்வையாளர்களா என்ற குழப்பம் ஏற்பட்டதால் அந்த அதிகாரிகளுடன் துரைமுருகனின் வழக்கறிஞர்கள் தீவிர வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடமே பெரும் அமளி துமளி ஆக காட்சியளித்தது.

     அதிகாலை முதல் ரெய்டு

    அதிகாலை முதல் ரெய்டு

    இதையடுத்து வருமானவரித் துறையின் உயர் அதிகாரிகள் சிலர் துரைமுருகனை தொடர்பு உண்டு அது தங்களது அதிகாரிகள்தான் என்று தெரிவித்துள்ளனர். ஒரு வழியாக சுமார் 3 மணி நேர தாமதத்திற்கு பிறகு அதிகாலை 3 மணி முதல், துரைமுருகன் வீடு மற்றும் அவரது கல்வி குடும்பங்களில் கல்வி நிறுவனங்கள் நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர்.

     குவிந்த திமுகவினர்

    குவிந்த திமுகவினர்

    இருப்பினும் வருமானவரித்துறை சோதனை தானா என்பதை வருமான வரி துறை நேரடியாக தெரிவிக்கவில்லை. அதிகாரபூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை என்பதால் குழப்பம் நீடித்துக் கொண்டுள்ளது துரைமுருகனின் வீடு மற்றும் அவரது கல்வி நிறுவனங்களை சுற்றிலும் ஏராளமான திமுகவினர் குழுமி உள்ளனர்.

    English summary
    There is a huge misunderstanding happened in DMK treasurer Durai Murugan house at Friday midnight as officials says they are coming from in Income Tax Department at their ID cards says they are from election vigilance.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X