ராணிப்பேட்டை மாந்தோப்பில் ஒரே அசிங்கம்.. 80 வயது மூதாட்டியிடம் அத்துமீறிய 19 வயது இளைஞர்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கீழ்விஷாரம் பகுதியில் உள்ள மாந்தோப்பில் 80 வயதாகும் மூதாட்டி கமலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வசித்து வந்தார். இவரிடம் 19 வயதாகும் நந்தகுமார் என்ற இளைஞர் அத்துமீறியதாக கூறப்படுகிறது. தரதரவென இழுத்து சென்று மோசமாக அத்துமீறியதாக கூறப்படுகிறது. இதில் மூதாட்டியின் நிலையை கேட்டு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆடிப்போனார்கள்.
போதை பழக்கத்தாலும் தவறான சகவாசத்தாலும் இளைஞர்கள் மோசமான செயல்களில் ஈடுபடுவது அடிக்கடி நடக்கிறது. மனிதத்தன்மையற்ற வகையில் சில இளைஞர்கள் பெண்களிடம் அத்துமீறுகிறார்கள். சிறு குழந்தைகள் என்று பார்ப்பது இல்லை.. அம்மா வயது பெண் என்று பார்ப்பது இல்லை.. சகோதரி வயது என்றும் பார்ப்பது இல்லை.. அதேபோல் சிலர் வயதானவர்கள் என்று கூட பார்க்காமல் அத்துமீறுவது ஆங்காங்கே நடக்கிறது.

அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் 19 வயது இளைஞர், 80 வயது மூதாட்டியிடம் நடந்து கொண்ட விதம் பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்படியுமா நடந்து கொள்வார்கள், இவ்வளவு தூரம் வெறித்தனமாக இளைஞர் நடந்து கொண்ட சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கீழ்விஷாரம் பகுதியில் 80 வயதாகும் மூதாட்டி கமலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வசித்து வந்தார். இந்த நிலையில் சுசிலாவின் மாங்காய் தோப்பிற்கு கத்தியவாடி பகுதியைச் சேர்ந்த பத்மநாபன் என்பவருடைய 19 வயது மகன் நந்தகுமார் என்பவர் நேற்று மாலை 5 மணியளவில் வந்தாராம். அப்போது போதையில் இருந்த இளைஞர் நந்தகுமார் மூதாட்டியிடம் அத்துமீறி நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் சுசிலாவை பாலியல் வன்கொடுமை செய்யவும் முயன்றிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி கத்தி கூச்சலிட்டாராம்.
இதனால் ஆத்திரமடைந்த நந்தகுமார் மூதாட்டியை கீழே தள்ளி தரதரவென இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது மூதாட்டி கமலா உடலில் பல்வேறு இடங்களில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டுள்ளது சம்பவ இடத்திலேயே மூதாட்டி கமலா உயிரிழந்தார். இது தொடர்பான சிசிடிவி பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்க நகை கொள்ளை
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கட்டுமான ஒப்பந்ததாரர் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, வெள்ளி பொருட்களை திருடி சென்றுள்ளனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பெரும்பாடி தனலட்சுமி நகரைச் சேர்ந்த கட்டுமான ஒப்பந்ததாரர் ராஜேஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கடந்த 1-ந் தேதி திருப்பதி கோவிலுக்கு சென்றார். பின்னர் நேற்று அதிகாலையில் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் பயத்துடன் ராஜேஷ் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது.
மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 20 பவுன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருந்தது. வீட்டின் பத்திரங்களும் காணவில்லை. வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்ததால் மர்ம நபர்கள் கண்காணிப்பு கேமராக்களின் டி.வி.ஆர். எந்திரத்தையும் திருடிச் சென்றிருக்கிறார்கள். திருட்டு போன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.12 லட்சம் என்று கூறப்படுகிறது. இந்த திருட்டு சம்பவம் குறித்து குடியாத்தம் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் குடியாத்தம் டிஎஸ்பி சுரேஷ், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி உள்ளிட்ட போலீசார் திருட்டு நடைபெற்ற வீட்டிற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications