வேலூர் குடியாத்தத்தில் படுக்கை அறையில் சங்கீதா இருந்த கோலம்.. ஆடிப்போன மாமியார்
வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கூடநகரம் ஊராட்சி பூசாரிபட்டி கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவரின் மனைவி சங்கீதா. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்த தம்பதிக்கு திருமணம் நடந்தது. ராஜேஷ் குடியாத்தத்தில் உள்ள சலூன் கடைக்கு சென்று விட்டார். சங்கீதா தனது குழந்தை மற்றும் மாமியாருடன் இருந்துள்ளார். குழந்தை அழுத நிலையில், மாமியார் சங்கீதாவின் அறைக்கு சென்றார். அங்கு அவர் இருந்த கோலம் ஆடிப்போக வைத்துள்ளது.
கணவன் மனைவி இடையே மனஸ்தாபங்கள் ஏற்படுவது இயல்பு. எனவே வேறுபாடுகளை எல்லாம் கடந்து ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, ஒருவருக்காக இன்னொருவர் என மாறி மாறி விட்டுக்கொடுத்தும், அன்பு பாராட்டியும், காதலுடன் இருந்தால் தான் கல்யாண வாழ்க்கை இனிக்கும். இதில் ஒருவரை ஒருவர் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள நினைக்கும் போதும், அடக்குமுறை நடக்கும் போதும் தான் பிரச்சனைகள் ஏற்படுகிறது. அந்த பிரச்னைக்காக தவறான முடிவெப்படுதும் நடக்கிறது. குடியாத்தம் பகுதியில் அப்படியான சம்பவம் ஒரு இளம் தம்பதிக்கு நடந்துள்ளது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கூடநகரம் ஊராட்சி பூசாரிபட்டி கிராமத்தை சேர்ந்த மணி என்பவரின் மகன் ராஜேஷ்க்கு 25 வயது ஆகிறது. குடியாத்தத்தில் சலூன் கடை வைத்திருக்கிறார். இவருக்கும் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த பால்வார்த்து வென்றான் கிராமத்தை சேர்ந்த 21 வயதாகும் ஏழுமலை மகள் சங்கீதா என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தையும், 9 மாத ஆண் குழந்தையும் இருக்கிறது.
நேற்று காலையில் குடியாத்தத்தில் உள்ள சலூன் கடைக்கு ராஜேஷ் சென்றுவிட்டார். வீட்டில் சங்கீதா மற்றும் அவரது மாமியார் உள்ளிட்டோர் இருந்திருக்கிறார்கள். குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்திருக்கிறது. குழந்தையை எடுக்கும்படி சங்கீதாவை அழைக்க சென்று பார்த்த போது அறையில் சங்கீதா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்திருக்கிறார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சங்கீதாவை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்துவிட்டு சங்கீதா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் வழக்குப் பதிவு செய்து சங்கீதாவின் முடிவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். சங்கீதாவிற்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகளே ஆவதால் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி, சங்கீதாவின் கணவர் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications