மாறிய வாக்குகள்.. அதிமுக தோல்விக்கு இதுவே காரணம்.. கேசி வீரமணி சொல்வது யாரை தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

திருப்பத்தூர் : கடந்த சட்டமன்றத் தேர்தலில் டிடிவி தினகரன் போன்றவர்களின் குழப்பத்தினால் இளைஞர்களின் வாக்குகள் மாறிவிட்டது என அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி பேசினார்.

Recommended Video

    அதிமுகவின் தோல்விக்கு என்ன காரணம்.. கட்சி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பரபர பேச்சு

    பதவிக்காக ஆசைப்பட்ட சிலர் மட்டுமே கட்சியை விட்டுச் சென்றுள்ளனர். கழகத்தின் உண்மையான தொண்டர்கள் யாரும் கட்சியில் இருந்து விலகவில்லை என்றும் கே சி வீரமணி தெரிவித்தார்.

    கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. இதனால் 10 வருடங்களுக்கு பிறகு ஆட்சியை இழந்த அதிமுக, தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து வருகிறது.

    டிடிவி தினகரன் காரணம்

    டிடிவி தினகரன் காரணம்

    சிலர் பாஜகவே அதிமுகவின் தோல்விக்கு காரணம் என்று வெளிப்படையாக கூறி வருகிறார்கள். சிலர் டிடிவி தினகரனை காரணமாக கூறுகிறார்கள். தென் மாவட்டங்களில் பல தொகுதிகளில் அதிமுக தோற்பதற்கு அமமுக பிரித்த வாக்குகள் காரணம் என்ற எண்ணம் உள்ளது.

    வட மாவட்டங்கள்

    வட மாவட்டங்கள்

    இதேபோல் வட மற்றும் டெல்டா மாவட்டங்களில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக வாக்குகள் பிரியும் என்று நினைத்து அதிமுகவிற்கு பலரும் வாக்களிக்கவில்லை என்று நிர்வாகிகள் கருதுகிறார்கள். இந்த கருத்தை முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி அதிமுக கூட்டத்தில் வெளிப்படுத்தி உள்ளார்.

    கேசி வீரமணி பேச்சு

    கேசி வீரமணி பேச்சு

    திருப்பத்தூர் மாவட்டம் ,மாதனூர் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஒன்றிய கழக செயலாளர்கள் ஜோதி ராமலிங்க ராஜா பொருளாளர் வெங்கடேசன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் மாவட்டக் கழகச் செயலாளருமான கே சி வீரமணி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறும் போது, வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற பாடுபட வேண்டும் .

    மாறிய வாக்குகள்

    மாறிய வாக்குகள்

    அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் தற்போது இணைந்துள்ள சிலர் பதவிக்காக மட்டுமே ஆசைப்பட்டு சென்றவர்கள் ஆவர். உண்மையான தொண்டர்கள் யாரும் கட்சியை விட்டு விலகவில்லை . கடந்த சட்டமன்றத் தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவிற்குப் பின் டிடிவி தினகரன் போன்றவர்கள் ஏற்படுத்திய குழப்பத்தினால் இளைஞர்களின் வாக்குகள் மாறிவிட்டது. ஆகையால் வருகின்ற தேர்தல்களில் இளைஞர்களை ஊக்குவித்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார் .

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+