வேலூர் விமலா.. இந்த "மேடம்" யாருன்னு நினைச்சீங்க? அசோக்நகர் டூ கோயம்பேடு.. சில்லறையாய் சிதறிய சென்னை
வேலூர்: யார் இந்த வேலூர் விமலா? போலீசார் இவரிடம் துருவி துருவி விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் பாலமுருகன்... இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்ராக வேலை பார்த்து வருகிறார்.. இவரது மனைவி பெய்ர ராஜலட்சுமி..

டிக்கெட்: இவர் கடந்த 23-ம் தேதி, கோயம்பேட்டிலிருந்து எம்ஜிஆர் நகருக்கு பஸ்ஸில் வந்துகொண்டிருந்தார்... இவருக்கு பக்கத்தில் ஒரு பெண் உட்கார்ந்து கொண்டிருந்தார்.. அசோக் நகர் அருகே பஸ் வந்துகொண்டிருந்தபோது, அந்த பெண், டிக்கெட் எடுப்பதற்காக தன்னுடைய பர்ஸை எடுத்தார்.. அப்போது அவரது பர்ஸிலிருந்த சில்லறைகள் கீழே விழுந்து சிதறியது..
இதைப்பார்த்ததுமே, பக்கத்தில் உட்கார்ந்திருந்த ராஜலட்சுமி கீழே குனிந்து அந்த சில்லறைகளை எல்லாம் பொறுக்கி அந்தப் பெண்ணிடம் தந்தார்.. அதற்குள் அசோக் பில்லர் வந்துவிட்டதால், அந்த பெண் இறங்கி சென்றுவிட்டார்..
அசோக்நகர்: அடுத்த ஸ்டாப்பிங்கில் ராஜலட்சுமியும் இறங்கினார்.. அப்போதுதான் தன்னுடைய கையில் வைத்திருந்த நகைப்பையை காணாமல் போனதை கணடு பதறினார்.. அதற்குள் 18 சவரன் நகையை வைத்திருந்தாராம் ராஜலட்சுமி... இதனால், பஸ்ஸைவிட்டு கீழே இறங்கியதுமே என்ன செய்வதென்றே தெரியாமல் நடுரோட்டிலேயே கதறி அழுதார்.
உடனே எம்ஜிஆர் நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடினார் ராஜலட்சுமி.. நகை காணாமல் போனதாக புகாரை தந்தார்.. அத்துடன், தனக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருந்த பெண், சில்லறையை சிதறவிட்டு கைவரிசை காட்டியிருப்பதாகவும் போலீசில் சொன்னார்.. இதையடுத்து போலீசார், அந்த பெண் இறங்கிச்சென்ற அசோக் நகர் பஸ் ஸ்டாப்பிலிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்..
வீடியோ: சந்தேகத்துக்குரிய அந்த பெண் அசோக்நகரிலிருந்து, ஆட்டோவில் ஏறி கோயம்பேடு நோக்கி செல்வது சிசிடிவியில் பதிவாகியிருந்தது.. உடனே போலீஸார் சிசிடிவி காட்சிகளில் பதிவான பெண்ணின் போட்டோவை ஆதாரமாக வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.. அப்போதுதான், அந்த பெண் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியை சேர்ந்த விமலா என்பது தெரியவந்தது..
பிக்பாக்கெட் ராணி விமலா என்றால், ஆந்திராவில் பிரபலமாம்.. இவருக்கு 35 வயதாகிறது.. இதையடுத்து, விமலாவை தேடும்பணியை போலீசார் தீவிரப்படுத்தினார்கள்.. அதற்குள் விமலா வேலூரில் பதுங்கிக்கொண்டார்.. இதையறிந்த போலீசார், வேலூருக்கே சென்று விமலாவை கைது செய்தனர். அவரிடமிருந்த சிறிது, நகை பணம் போன்றவற்றை மட்டுமே போலீசாரால் பறிமுதல் செய்ய முடிந்திருக்கிறது.
வாக்குமூலம்: இதற்கு பிறகு ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணையை ஆரம்பித்துள்ளார்.. அப்போது விமலா சொல்வதை கேட்டு போலீசாரே மிரண்டு போய்விட்டார்களாம்.
ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா என எந்த மாநிலத்தையும் விமலா விட்டுவைக்கவில்லையாம்.. எல்லா மாநிலங்களிலுமே கைவரிசையை காட்டியிருக்கிறார்.. எங்கேயுமே இவர் சிக்காமல் தப்பித்தும் வந்துள்ளார். இதில் சென்னையில்தான் அதிக அளவு திருடியிருக்கிறாராம் விமலா.
கூட்டம்: எப்போதுமே கூட்டமான பஸ்களில் ஏறிக் கொண்டு, பஸ்ஸிலுள்ள பெண்கள் மீது அரிப்பு பொடியை தூவிவிட்டு, அவர்களின் கவனத்தை திசை திருப்பிவிட்டு, திருடுவாராம்.. சில்லறையை சிதறவிட்டும் திருடுவாராம். இப்படி திருடுவதில் ஏகப்பட்ட வித்தைகளில் கைவசம் வைத்திருக்கிறாராம் விமலா..
விமலாவுக்கு திருடுவதுதான் நீண்ட கால தொழிலாம்.. அதாவது, குலத்தொழிலாகவே இதை செய்து வருகிறாராம். அதுவும், தீபாவளி, பொங்கல் என பண்டிகை காலம் வந்துவிட்டால், இவரது ஊரை சேர்ந்தவர்கள் சென்னையிலேயே வந்து தங்கிவிடுவார்களாம்.. தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் புகுந்து கைவரிசையைகாட்டுவார்களாம்..
குடும்பம்: விமலாவுக்கு கல்யாணமாகி கணவனுடன் வாழ்ந்து வருகிறார்.. 5 குழந்தைகளும் இருக்கிறார்கள்.. அந்த கணவர் எங்குமே வேலை வெட்டிக்கு போவது இல்லையாம்.. 5 குழந்தைகளை பார்த்துக்கொள்வதுதான் கணவரின் முழுநேர வேலையாம்.
விமலா மட்டும்தான் திருட்டு தொழிலில் ஈடுபட்டு, லட்சக்கணக்கில் சம்பாதித்துள்ளார்.. தன் குடும்ப செலவுகளை கவனித்துக் கொண்டே, உல்லாச வாழ்க்கையிலும் ஈடுபடுவாராம் விமலா...!!
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications