கடுப்பேற்றிய கள்ளக்காதல்.. "மிட்நைட்டில்" கிச்சனில் நுழைந்த மனைவி.. அடுத்து நடந்த "பகீர்"!
கணவன் கள்ளக்காதலை கைவிடாததால், மனைவி சுடுநீரை ஊற்றிவிட்டார்
ராணிப்பேட்டை: நடுராத்திரி கிச்சனுக்கு சென்ற மனைவி செய்த காரியத்தால், தூங்கி கொண்டிருந்த கணவன் அலறி துடித்த சம்பவம் பரபரப்பை தந்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் அந்த இளைஞர்.. அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு திருமணமாகி, மனைவி, 2 மகன்கள் இருக்கிறார்கள்.. அப்படி இருக்கும்போது, கணவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

கண்ணை மறைத்த காதல்
அடிக்கடி, கள்ளக்காதலியை இவர் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது... இவர்கள் 2 பேரும் ஜோடியாக ஊர் சுற்றியதால், கள்ளக்காதல் விஷயம் மனைவிக்கு தெரிந்துவிட்டது. இதனால், அதிர்ந்து போன மனைவி, கள்ளக்காதலை கைவிடுமாறு சொன்னார்.. ஆனால், கணவன் எதையுமே காதில் போட்டுக் கொள்ளவில்லை.. இதனால் மனவருத்தம் அடைந்த மனைவியால், நிம்மதியாக இருக்க முடியவில்லை.. மறுபடியும் மறுபடியும் கள்ளக்காதலை கைவிடும்படி கெஞ்சினார்.. கண்ணீர் வடித்தார்.

மனக்குமுறல்
அப்போதும் கணவன் மனம் மாறவில்லை.. இப்படியே இந்த ஒரு மாதமாகவே தம்பதிக்குள் இது தொடர்பாக கடும் வாக்குவாதமும், தகராறும் ஏற்பட்டு வந்தது... தனக்கு கணவர் துரோகம் செய்ததை நினைத்து தினமும் மனக்குமுறலில் மனைவி தவித்தபடியே வந்தார்... கள்ளத்தொடர்பு சம்பந்தமாக கணவன் மனைவிக்குள், நேற்று முன்தினமும் வீட்டில் தகராறு ஏற்பட்டது... வழக்கம்போல், மனைவி பேச்சை, கண்டுகொள்ளாத கணவன், தூங்க சென்றுவிட்டார்.

வெந்நீர்
இவ்வளவு சொல்லியும், கள்ளக்காதலை கைவிட மறுக்கும் கணவனை நினைத்து மனைவி, இரவெல்லாம் அழுது கொண்டே இருந்தார்.. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்து, கணவனுக்கு சரியான பாடம் புகட்டினால் மட்டுமே திருந்துவார் என்று முடிவு செய்தார்.. அதன்படி, நடுராத்திரி கிச்சனுக்கு சென்றார். அடுப்பு பற்ற வைத்து வெந்நீரை கொதிக்க வைத்தார்... ஆவி பறக்க கொதித்துக்கொண்டிருந்த வெந்நீரை தூக்கி வந்து, தூங்கிக்கொண்டிருந்த கணவனின் ஆடைகளை விலக்கி விட்டு, அவரது மர்ம உறுப்பில் வெந்நீரை ஊற்றினார். இதனால் கணவன் வலியால் அலறி துடித்தார்.

சுடுநீர் + அலறல்
சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துவிட்டனர்.. அவர்கள் இளைஞரை மீட்டு பாணாவரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், கணவரின் நிலைமை சீரியஸாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. இப்போது தீவிர சிகிச்சை அங்கு அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மனைவியிடம் பாணாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்... இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ராணிப்பேட்டை வீட்டில் 21 சவரன் தங்கம்.. 2 ஏக்கர் நிலப்பத்திரம்.. பீரோவை உடைக்காமலேயே ட்விஸ்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications