ரவுடி தங்கராஜுக்கும், காதலி தண்டுமாரிக்கும் பயங்கர சண்டை.. ரவடி பலி.. மகனுடன் தண்டுமாரி எஸ்கேப்!
சத்துவாச்சாரி ரவுடியை பெண் ஒருவர் கொலை செய்துள்ளார்.
Recommended Video

வேலூர்: கொலைகார ரவுடியை பெண் ஒருவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ள சம்பவம் வேலூர் மாவட்டத்தையே அதிர வைத்துள்ளது.
வேலூர் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். 35 வயசான தங்கராஜ் பெரிய ரவுடி என கூறப்படுகிறது! இதுவரை 30-க்கும் மேல இவர் மீது வழக்குகள் உள்ளன. கொலை, கொள்ளை, வழிப்பறி என ஒரு கேஸையும் இவர் விடவில்லை.
நிலுவையில் உள்ள இந்த வழக்கின் விசாரணைகள் போய்க் கொண்டிருக்கிறன. அது ஒருபக்கம் இருந்தாலும், தெருவில் ஒருத்தரை நடக்க விட மாட்டாராம் இந்த தர்மராஜ்... யாரை பார்த்தாலும் மிரட்டி பணம் பிடுங்கி எடுப்பாராம்.

சண்டை துவங்கியது
இப்படிப்பட்ட ரவுடி மீது ஒரு பெண்ணுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. அந்த பெண் அதே பகுதியை சேர்ந்தவர்தான். அவருக்கு வயசு 39. 2 மகன்களுடன் வசித்து தண்டுமாரி வருகிறார். நேற்றிரவு ஃபுல் போதையுடன் தண்டுமாரி வீட்டுக்கு போனார் தங்கராஜ். என்ன காரணமோ தெரியவில்லை, ரெண்டு பேரும் சண்டை போட்டு கொண்டார்கள்.

அலறிய தண்டுமாரி
பெரிய அளவில் தகராறு போய்விட்டது. அதனால் ஆத்திரம் அடைந்த தங்கராஜ் கீழே கிடந்த பொருளை எடுத்து தண்டுமாரியை பலமாக தாக்கி உள்ளார். இதில் வலி தாங்க முடியாமல் தண்டுமாரி சத்தம் போடவும், அவரது 19 வயது மகன் தர்மா ஓடிவந்துவிட்டார்.

அடிக்க பாய்ந்த தர்மா
அம்மா படுகாயத்துடன் அலறியதை கண்டும் ஆத்திரமடைந்த தர்மா, தங்கராஜை அடிக்க போனார். ஆனால் ரவுடி தங்கராஜ் தர்மாவையும் திருப்பி தாக்க ஆரம்பித்தார். ரத்த காயத்துடன் விழுந்து கிடந்த தண்டுமாரி, தன் மகனை அடிப்பதை கண்டதும், கோபம் அதிகமாகி தங்கராஜ் தலையில் ஒரு பெரிய கல்லை தூக்கி போட்டார்.

மாயமான தண்டுமாரி
இதில் தங்கராஜ் மண்டை, முகம் என சிதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிறகு பிணத்தை அப்படியே விட்டுவிட்டு, மகனை கூட்டிக் கொண்டு தண்டுமாரி எஸ்கேப் ஆகிவிட்டார். தகவலறிந்த சத்துவாச்சாரி போலீஸார் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி மாயமான தண்டுமாரி, தர்மாவை தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications