சிவா மனசுல ஏழுமலை.. பணம் கேட்டதால் சண்டை.. அடித்தே கொன்றார்.. ஆம்பூரில் ஷாக்!
தண்டவாளத்தில் பெண் கொலையுண்ட சம்பவத்தில் இளைஞர் கைதாகி உள்ளார்
ஆம்பூர்: "என்னைவிட சிவாவுக்கு 3 வயசு அதிகம்.. ஆனாலும் ஜாலியா இருந்தோம்.. செலவுக்கு பணம் கேட்டு தரலன்னு சொல்லிட்டதும் ஆத்திரத்தில் அடிச்சு கொன்னுட்டேன்" என்று வாக்குமூலத்தில் அதிர வைத்துள்ளார் ஏழுமலை
ஆம்பூர் அருகே, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி பச்சகுப்பம் ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. இங்குள்ள ரெயில்வே தண்டவாளத்தின் அருகே கடந்த மாதம் 18-ந் தேதி இளம்பெண் ஒருவர் இறந்து கிடந்தார். அவரது உடம்பெல்லாம் காயங்கள் இருந்தன. அவர் யார், எந்த ஊர் என தெரியவில்லை.
அவரது ஒரு கை, ஒரு கால் துண்டாகி கிடந்தது. புடவையால், அந்த பெண்ணின் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டதற்கான தடயங்களும் கண்டறியப்பட்டன. இது சம்பந்தமாக ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அந்த பெண்ணின் புகைப்படமும் இணையத்தில் பரவியது.

சிவரத்தினம்
இந்தநிலையில் ஒரு மாதம் கழித்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் அடையாளம் நேற்று தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட பெண், தஞ்சாவூர் மாவட்டம் மேல் மோட்டூர் கிராமத்தை சேர்ந்த சிவரத்தினம் என்பது தெரியவந்துள்ளது.

கள்ள உறவு
கணவரை பிரிந்து வாழும் சிவரத்தினத்துக்கு திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஏழுமலை என்பவருடன் கள்ள உறவு இருந்திருக்கிறது. இதையடுத்து, போலீசார் ஏழுமலையை பிடித்து விசாரித்ததில், சிவரத்தினத்தை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

பழக்கம்
சிவரத்தினம் தன் வாக்குமூலத்தில் சொன்னதாவது: "நானும் சிவாவும் ஒரே கம்பெனியில் வேலை பார்த்தோம். அப்பதான் எங்களுக்கு பழக்கம் ஆரம்பமானது. புருஷனுடன் சண்டை போட்டு பிரிந்ததால், அடிக்கடி என்கிட்ட கஷ்டத்தை சொல்லி அழும். நானும் ஆறுதல் சொல்வேன். என்னைவிட சிவாவுக்கு 3 வயசு அதிகம். ஆனாலும் எங்களுக்குள்ள நெருக்கம் அதிகமானது.

செலவுக்கு பணம்
அடிக்கடி திருப்பூரிலிருந்து திருவண்ணாமலை வந்து, எங்க வீட்டில் 2 பேரும் ஜாலியா இருப்போம். அடிக்கடி சிவாகிட்ட நான் செலவுக்கு பணம் கேட்டு வாங்கிப்பேன். அப்படித்தான், கடைசியா ஊருக்கு வரும்போது, செலவுக்கு பணம் கேட்டதுக்கு இல்லைன்னு சொல்லிடுச்சு. அதனாலதான் சண்டை வந்தது.. நான் அடிச்சதுல கீழே மயங்கி விழுந்ததும், கழுத்தை நெரித்து கொன்னுட்டேன்.

கொன்னுட்டேன்
சடலத்தை பச்ச குப்பம் ரயில்வே தண்டவாளத்தில் வீசிவிட்டேன். யாருக்கும் இது தெரியாதுன்னுதான் நினைச்சேன். ஆனா சிவாவின் செல்போனை வைத்து என்னை போலீசார் கண்டுபிடித்துவிட்டனர்" என்றார். இதனிடையே, ஒரு மாதமாக தங்கள் மகள் காணாமல் போனதாக நம்பிய பெற்றோர், சிவரத்தினம் இறந்ததை கேட்டதும் கதறி அழுதது மனதை கலங்க வைப்பதாக இருந்தது.












Click it and Unblock the Notifications