வேலூரில் நள்ளிரவில் என்னப்பா அங்க சத்தம்.. பட்டா கத்தியுடன்.. நடுரோட்டில் என்ன ஒரு கொண்டாட்டம்!
வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே நடுரோட்டில் பைக்குகள் மீது கேக் வைத்து பட்டா கத்தியுடன் பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் வேலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த ஓடத்தியார் கோவில் அருகே (வேலூர் -சித்தூர் சாலையில்) நேற்று நள்ளிரவு யமஹா பைக்கை நிறுத்திவிட்டு அதன் மீது பிறந்த நாள் கேக்கை வைத்து, அதில் பெரிய பட்டா கத்தியை வைத்து வெட்டி பிறந்த நாள் கொண்டாடி உள்ளனர்.

அத்துடன் பிறந்த நாள் கொண்டாடிய பூவரசன் என்ற இளைஞருக்கு ஆள் உயர பூமாலை அணுவித்துள்ளனர்.சரவெடிகள் வெடித்து நடுரோட்டில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள் இளைஞர்கள் சிலர்.
வேலூர் சித்தூர் சாலை மிகவும் பரபரப்பான சாலையாகும். சாலையோரம் நள்ளிரவில் பைக்குகளை நிறுத்தி பட்டா கத்தியில் கேக் வெட்டி பட்டாசு வெடித்து கொண்டாடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தை அந்த நேரத்தில் சாலைகளில் சென்ற பயணிகள் மற்றும் பாதசாரிகள் வீடியோ எடுத்தனர். நடுரோட்டில் பட்டா கத்தியுடன் கேக் வெட்டியது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

பொதுவாக பட்டா கத்தியில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடுவது குற்றம் ஆகும். பட்டா கத்தியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கொண்டாட்டத்தில் ஈடுபடுபவர்களை போலீசார் கடந்த காலங்களில் கைது செய்துள்ளனர். பட்டா கத்தியில் பிறந்த நாள் கொண்டாடிய ரவுடிகள் முதல் பொதுமக்கள் வரை பலர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரசியல் கட்சி தலைவர்கள் தான் , ஆள் உயர மாலை அணிந்து பட்டா கத்தியில் பிறந்த நாள் கொண்டாடும் கலாச்சாரத்தை தொடங்கி வைத்தனர். இது ரவுடிகள் தொடங்கி, இப்போது சாதாரண இளைஞர்கள் வரை பரவி விட்டது. பட்டா கத்தியுடன் அச்சுறுத்தும் வகையில் செயல்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications