கம்பத்தில் வாகன சோதனையின் போது 42 கிலோ கஞ்சா பறிமுதல்- வீடியோ
கம்பம் அருகே வாகன தணிக்கையின் போது இருவேறு இடங்களில் 42 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கம்பம் : தேனி மாவட்டம் கம்பம் அருகே போலீசார் நடத்திய வாகன தணிக்கையில் 42 கிலோ கஞ்சா போதைபொருள் பறிமதல் செய்யப்பட்டது.
கம்பம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவில் கஞ்சா கைமாறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் வாகன தணிக்கையை போலீசார் தீவிரப்படுத்தினர். அப்போது கம்பம் - பம்பை சாலையில் சந்தேகத்திற்கிடமாக வந்த ஆட்டோவை சோதனை செய்த அதிகாரிகள் அதிலிருந்த 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஆட்டோ ஓட்டுநர் பிரபு மற்றும் துறைப்பாண்டி ஆகிய 2 பேரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர்களிடமிருந்து கேரளாவுக்கு கஞ்சா வாங்கிச்சென்றது தெரியவந்தது.
கம்பம் மேட்டுசாலையில் சிலுவைக்கோயில் என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் அவ்வழியாக வந்த டாடா சுமோவில் இருந்து 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர் மேலும் இதுதொடர்பாக கேரளாவைச் சேர்ந்த 2 பேரை கைது செய்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications