பொறுப்பு முதல்வர் குறித்து அதிமுகதான் முடிவு செய்ய வேண்டும்.. ஜி.ராமகிருஷ்ணன் -வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: பொறுப்பு முதல்வர் குறித்து அதிமுக மேலிடம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவைப் பார்க்க அங்கு வந்த ஜி.ராமகிருஷ்ணன் அதிமுக தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொறுப்பு முதல்வரை நியமிப்பது தொடர்பாக அதிமுக தலைமைதான் முடிவு செய்ய முடியும் என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications