குடும்பத் தகராறு.. கணவன், மனைவி விஷயம் குடித்து தற்கொலை முயற்சி: வீடியோ
Subscribe to Oneindia Tamil
தேனி: தேனி மாவட்டம் கம்பத்தில் குடும்பத் தகராறு காரணமாக கணவன் மனைவி இருவரும் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கம்பம் பார்க் தெருவில் குடியிருப்பவர் ஈஸ்வர். அவருடைய மனைவி நாகலட்சுமி. இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். தனியார் வேன் ஓட்டுநரான ஈஸ்வருக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு வரும் என்று கூறப்படுகிறது. சம்பவத்தன்று இருவருக்கும் ஏற்பட்ட தகராறு முற்றி இருவரும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே ஈஸ்வரன் உயிரிழந்தார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நாகலட்சுமி தேனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். குடும்பத் தகராறு காரணமாக தம்பதிகள் பூச்சு மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications