பணம் வாங்கியதாக புகார்... நாராயணசாமிக்காக பதவி துறந்த ஜான் குமார் வீட்டில் அதிரடி ரெய்டு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் பெரும்பான்மை இடங்களைப் பெற்று ஆட்சி அமைத்தது. முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி முதல்வர் ஆனார். இதனால், அவர் அடுத்த 6 மாதத்திற்குள் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இந்நிலையில், நாராயணசாமி போட்டியிட வசதியாக நெல்லித்தோப்பு எம்.எல்.ஏ. ஜான் குமார் கடந்த சில தினங்களுக்கு முன் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், பணம் பெற்றுக் கொண்டே ஜான் குமார் ராஜினாமா செய்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. அதன் தொடர்ச்சியாக அவரது இல்லம் மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சம்பவம் புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ:












Click it and Unblock the Notifications