வரி ஏய்ப்பு புகார்... நத்தம் விஸ்வநாதன், சைதை துரைசாமி வீடுகளில் வருமான வரித்துறை ரெய்டு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், சென்னை மேயர் சைதை துரைசாமி ஆகியோரின் வீடுகள் உட்பட தமிழகம் முழுவதும் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். வரி ஏய்ப்பு மற்றும் மோசடி உள்ளிட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனை யின்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ள பணம், ஆவணங்கள் அடிப்படையில் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க, அதிமுக அமைப்புச் செயலாளர் மற்றும் செய்தித் தொடர்புக் குழு உறுப்பினர் ஆகிய பொறுப்புகளில் இருந்து நத்தம் விஸ்வநாதனை நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications