நடிகர் சங்க மோதல்... கருணாஸின் கார் கண்ணாடியை உடைத்தவர் கைது- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை தி. நகரில் உள்ள சங்க மைதானத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு அழைப்பிதழ் இல்லாமல் வந்த முன்னாள் நிர்வாகிகளின் ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோதலில் முடிந்தது. இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தியதுடன் 20 பேரை கைதும் செய்தனர். இதற்கிடையே சங்க மைதானத்திற்கு அருகே நின்று கொண்டிருந்த நடிகர் கருணாஸின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கண்ணாடி உடைப்பு குறித்து கருணாஸின் கார் டிரைவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் தொடர்ச்சியாக கருணாஸின் கார் கண்ணாடியை உடைத்த பிரபு என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications