காவிரி விவகாரம்.. பதிலளிக்க மறுத்த நக்மா.. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என தாக்கு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக மகிளா காங்கிரஸ் கலந்தாய்வு கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. இதில் அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான நடிகை நக்மா கலந்து கொண்டு மகிளா காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நக்மாவிடம் காவிரி பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், அதற்கு பதிலளிக்க மறுத்த நக்மா, அப்பிரச்சினை நீதிமன்றத்தில் உள்ளது என மழுப்பலாக பதிலளித்தார். மேலும், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications