புதுவை இடைத்தேர்தல்.. 3 அடுக்கு பாதுகாப்பு... துணை ராணுவம் வருகிறது- வீடியோ
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற நவம்பர் 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, திமுக -காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில், தேர்தல் பணிகளை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சத்யேந்திரசிங் துர்சாவத் நேரில் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'நெல்லிதோப்பு இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவம் வருகிறது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படும்' என்றார்.












Click it and Unblock the Notifications