பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்... மதுரை ஏர்போர்ட்டில் சசிகலா புஷ்பா பரபரப்பு பேட்டி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: ராஜ்யசபாவில் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா மீது பரபரப்பான புகார்களை முன் வைத்ததைத் தொடர்ந்து, அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார் சசிகலா புஷ்பா எம்.பி. இந்நிலையில், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இன்று ஆஜராக மதுரை வந்த எம்.பி சசிகலா புஷ்பா விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "என் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை சட்டப்படி சந்திக்க தயாராக உள்ளேன். மேலும் பெண்கள் அரசியல் போன்ற அனைத்து துறைகளிலும் தைரியமாக வருவதற்கு பாதுகாப்பு தேவை. ஊடங்கள் அதற்குப் பெரிதும் துணையாக இருப்பதற்கு நன்றி'' என்றார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications