64வது பிறந்தநாள்... 264 தொகுதிகளிலும்.. விஜயகாந்த் என்ன செய்யப் போகிறார் தெரியுமா?- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் நாளை மறுதினம் அதாவது ஆகஸ்ட் 25ம் தேதி தனது 64வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை தொண்டர்கள் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் இந்த ஆண்டு விஜயகாந்த் தனது பிறந்த நாளை 'பசுமை தமிழகம்' என்ற பெயரில் மரக்கன்றுகளை நட்டு கொண்டாட திட்டமிட்டுள்ளார். அதன்படி, தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 264 தொகுதிகளிலும் சுமார் இரண்டரை லட்சம் மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயிக்கப்படுள்ளது. அதன்படி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகக்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி இன்று நடந்தது. கட்சி அலுவலக வளாகத்தில் 5 மரக்கன்றுகளை நட்டு விஜயகாந்த் நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications