நெடுஞ்சாலைத்துறை மாஜி பொறியாளர் வீட்டில் அதிரடி ரெய்டு... முக்கிய ஆவணங்கள் சிக்கின- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சேலம்: நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளராக இருந்து, கடந்த ஜனவரி மாதத்தில் ஓய்வு பெற்றவர் ஜெயராமன். சென்னையில் வசித்து வரும் இவருக்கு, சேலம் உட்பட பல்வேறு இடங்களில் சொந்த வீடும், வணிக வளாகமும் உள்ளது. இதுதவிர உளுந்தூர்பேட்டையில் சொந்தமாக கல்லூரி ஒன்றையும் ஜெயராமன் நடத்தி வருகிறார். இந்நிலையில், சேலத்தில் மேம்பாலம் கட்டியது தொடர்பாக தனியார் நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெற்றதாக இவர் மீது வழக்கு உள்ளது. அதன் தொடர்ச்சியாகசேலத்தில் உள்ள இவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். சுமார் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சோதனையில், பல லட்ச ரூபாயும், ஏராளமான ஆவணங்களும் கிடைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications