தொடரும் காட்டு யானைகள் அட்டகாசம்... பள்ளிக் கதவை உடைத்து உள்ளே புகுந்ததால் பீதி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஏழு காட்டு யானைகள் கொண்ட கூட்டம் ஒன்று கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். நேற்று அங்குள்ள பங்களா ஒன்றின் கதவை உடைத்து, அங்கிருந்த மரங்களைச் சேதப்படுத்திய யானைக் கூட்டம், இன்று பள்ளியொன்றில் புகுந்தது. விரைந்து வந்த வனத்துறையினர் யானைகளை விரட்டியடித்தனர். குடியிருப்பு பகுதியில் யானைகள் சுற்றி வருவதால், இரவு நேரத்தில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேச் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications