காப்புக் காடு.. ராத்திரி நேரம்.. சுற்றிலும் ஆணுறைகள்.. கழுத்து அறுபட்ட நிலையில் சிறுவன் பிணம்!

15 வயது சிறுவன் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு உள்ளான்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    உளுந்தூர்பேட்டை.. 15 வயது சிறுவன் கொடூர கொலை-வீடியோ

    உளுந்தூர்பேட்டை: ஆணுறைகள் சிதறி கிடக்க.. அந்த இடத்தில் 10-ம் வகுப்பு மாணவன் ஒருவன் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு வீசப்பட்டுள்ள சம்பவம் பெரிய அதிர்ச்சியை மக்களுக்கு ஏற்படுத்தி உள்ளது.

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமம் அயன் குஞ்சரம். இங்கு வசித்து வருபவர் கேசவன். இவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். அவரது மனைவி பராசக்தி. கூலிவேலை செய்து வருகிறார்.

    இந்த தம்பதியின் மகன்தான் சிவக்குமார். 15 வயது சிறுவன். எலவனாசூர்கோட்டை அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.

    சிவக்குமார்

    சிவக்குமார்

    நேற்று ஞாயிற்றுக்கிழமை ஸ்கூல் லீவு என்பதால் விளையாட வெளியே போனான் சிவக்குமார். ஆனார் வீட்டுக்கு திரும்பி வரவே இல்லை. இதனால் வீட்டில் உள்ளவர்கள் சிவக்குமாரை எங்கெங்கோ தேடினர். ஆனாலும் கிடைக்கவே இல்லை. அப்போது அங்குள்ள வனப்பகுதியான காப்புக்காடு என்ற இடத்திற்கு, நள்ளிரவில் சென்றவர்கள் சிவக்குமார் பிணமாக கிடப்பதை பார்த்துள்ளனர்.

     கொடூர கொலை

    கொடூர கொலை

    இதை பற்றி தகவல் தரவும் குடும்பத்தினர் பதறிக் கொண்டு ஓடினார்கள். கழுத்து மிக கொடூரமாக அறுக்கப்பட்டு, ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தான் சிவக்குமார். காட்டுப்பகுதிக்குள் சிறுவன் இப்படி சடலமாக விழுந்து கிடக்கும் தகவல் எலவனாசூர்கோட்டை போலீசாருக்கு தெரிவிக்கப்பட, அவர்களும் விரைந்து வந்து, தீவிர விசாரணையில் இறங்கினர்.

    அழகிகள்

    அழகிகள்

    அப்போதுதான் சில பகீர் விஷயங்கள் வெளியே வந்தன. கொலை நடந்த இந்த காட்டுப் பகுதிக்கு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சிலர் அழகிகளை அடிக்கடி கூட்டி வந்து ஜாலியாக இருப்பார்களாம். நேற்றுகூட அப்படிதான் யாரோ பெண்களை கூட்டி வந்து உல்லாசமாக இருந்துள்ளனர்.

     கொடூர கொலை

    கொடூர கொலை

    இதனை சிவக்குமார் நேரில் பார்த்துவிட்டான். அவன் எங்கே ஊருக்குள் போய் இதை எல்லாம் சொல்லிவிடுவானோ என்று நினைத்துதான், சம்பந்தப்பட்ட நபர்கள் சிவக்குமாரை கழுத்தை அறுத்து கொன்றிருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    ஆணுறைகள்

    ஆணுறைகள்

    சிவக்குமார் சடலத்துக்கு பக்கத்தில் ஆணுறைகள் சிதறி கிடந்துள்ளன. அதனை கைப்பற்றிய போலீசார், யார் நேற்று அங்கு வந்தது, என்பது குறித்த விசாரணையில் இறங்கிஉள்ளனர். கொலை நடந்த சமயத்தில் யாரோ 4 பேர் அங்கு சுற்றி வந்துள்ளனர். அதனால் அவர்களையும் பிடித்து விசாரித்து வருகிறார்கள். இந்த 4 பேரில் ஒரு தாத்தாவும் அடக்கம். சிறுவன் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+