பொதுமக்களுக்கு குட் நியூஸ்.. கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று, நாளை சிறப்பு பஸ்கள்
விழுப்புரம்: கிருஷ்ணஜெயந்தி, சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு இன்றும், நாளையும் சிறப்பு பேருந்துகளை தமிழக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. விடுமுறையையொட்டி, பொதுமக்கள் அதிகளவில் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வார்கள் என்பதால் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
கல்வி, வேலை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சென்னை, கோவை, திருப்பூர், திருச்சி உள்ளிட்ட தொழில் நகரங்களில் வெளியூர் மக்கள் ஏராளமானோர் தங்கியுள்ளனர். இவர்கள் வார இறுதி நாட்கள், பண்டிகை தினங்கள், தொடர் விடுமுறைகளில் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம்.

தற்போது வார விடுமுறை, கிருஷ்ண ஜெயந்தி மற்றும் முகூர்த்த நாள்களும் அடுத்தடுத்து வருகின்றன. இதனால், பேருந்துகளில் பயணிகளின் கூட்டம் அலைமோதும். எனவே, பயணிகளின் வசதிக்காக ஒவ்வொரு வாரமும் சிறப்பு பேருந்துகளை போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், தற்போதும் சிறப்பு பேருந்துகளுக்கான குட் நியூஸை போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
கிருஷ்ண ஜெயந்தி, வார இறுதி நாள்களை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக கிளாம்பாக்கம் கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு ஆகஸ்ட் 23, 24 ஆகிய தேதிகளில் 330 சிறப்புப் பேருந்துக் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் சார்பில் இயக்கப்படவுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் க.குணசேகரன் கூறியுள்ளதாவது: வார இறுதி நாள்களையொட்டி ஆகஸ்ட் 23, 24 தேதிகளில் கிளாம்பாக்கம் கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி, சிதம்பரம், திருவண்ணாமலை, போளூா் ஆகிய ஊா்களுக்கு பொதுமக்கள் அதிகமாகப் பயணம் செய்யும் வாய்ப்புள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு பயணிகளின் வசித்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் சாா்பில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை விட கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23) கூடுதலாக 165 பேருந்துகளும், சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) 165 பேருந்துகளும் என மொத்தம் 330 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வேலூா், ஒசூா், புதுச்சேரி (கிழக்கு கடற்கரைச் சாலை வழி), திருவண்ணாமலை (ஆற்காடு-ஆரணி வழி), திருவண்ணாமலை (காஞ்சிபுரம், வந்தவாசி வழி) ஆகிய ஊா்களுக்கு ஆகஸ்ட் 23, 24 ஆகிய தேதிகளில் தலா 40 பேருந்துகள் என 80 சிறப்புப் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படவுள்ளன.
மேலும், பயணிகளின் கூட்டம் குறையும் வரை தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்படும். சிறப்புப் பேருந்துகளின் இயக்கத்தை கண்காணிக்க தேவையான அலுவலா்கள் பணி அமா்த்தப்பட்டுள்ளனா் என்று தெரிவித்துள்ளார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications