குளத்தில் குளித்த 4 சிறார்கள் பலி.. அக்கா- தம்பிகள்!
திண்டிவனம் அருகே குளத்தில் மூழ்கி 4 மாணவர்கள் பலியானார்கள்.
திண்டிவனம்: திண்டிவனம் அருகே குளத்தில் குளித்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் 4 பேரும் அக்கா - தம்பிகள் என்பது மேலும் சோகத்தை கூட்டியுள்ளது.
திண்டிவனம் அருகே உள்ளது தளவாதி என்ற கிராமம். இங்கு வசித்து வருபவர் பாஸ்கர். இவரது மகள் அபிராமி. அங்குள்ள பள்ளி ஒன்றில் அபிராமி பிளஸ் 2 படித்து வருகிறார்.

இவர் தனது தம்பி திருமுருகனை அழைத்து கொண்டு குளித்தில் குளிக்க சென்றார். அப்போது முனுசாமி என்பவரின் மகள் அஸ்வினியும் அவரது தம்பி ஆகாஷூம் குளிக்க உடன் வந்தார்கள். அஸ்வினிக்கு வயது 15, ஆகாஷுக்கு வயது 9 ஆகிறது. 2 அக்கா, 2 தம்பிகள் ஒன்றாக சேர்ந்து குளிக்க தொடங்கினார்கள்.
அப்போது 4 மாணவர்களுமே குளத்தில் மூழ்கி திடீரென மாயமானார்கள். குளிக்க வந்த பிள்ளைகள் இன்னும் வீட்டுக்கு வரவில்லையே என்று குளத்துக்கு வந்து பார்த்தால் அவர்களை காணவில்லை. இதனால் குளத்தில் மூழ்கியிருக்கலாம் என 4 போரையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது.
நீண்ட நேரத்துக்கு பின்பு 4 பேரும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். குளத்தில் நிறைய சேர் இருந்ததால், பிள்ளைகள் சிக்கி கொண்டுள்ளார்கள். இதனால் ஒருவரையொருவர் காப்பாற்றிக் கொள்ளவும் முடியவில்லை என கூறப்படுகிறது.
அக்கா-தம்பிகளான இந்த 4 மாணவர்களும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications