செஞ்சியில் மணல் கொள்ளையர்களை சுட முயற்சி.. மாட்டின் மீது பாய்ந்த குண்டு... 5 பேர் கைது
செஞ்சி:விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் தலைமறைவாக இருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து துப்பாக்கி மற்றும் ஏராளமான தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கெடார் என்ற இடத்தில் கடந்த 30ஆம் தேதி நள்ளிரவு வீரா மூர் ஏரியில் மணல் அள்ளிக் கொண்டு இருந்தபோது அப்போது அங்கிருந்த சில மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். அதில் மாடு பலத்த காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர், அப்போது, புதுச்சேரி மற்றும் விழுப்புரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சிலர் பயிற்சி பெற்ற துப்பாக்கிகளுடன் இரவு நேர வேட்டையில் ஈடுபட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

துப்பாக்கிகளுடன் இரவு நேர வேட்டைக்கு சென்ற போது அவர்கள் சுட்டுள்ளனர். ஆனால், துப்பாக்கி குண்டு, தவறுதலாக மாட்டின் மீது பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களில் 5 பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

மேலும் 7 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். அவர்களிடமிருந்து நவீன ரக துப்பாக்கி மற்றும் ஏராளமான தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன இந்த சம்பவத்தால் அப்பகுதியில் தொடர்ந்து பீதி நிலவி வந்தது தற்போது மக்கள் ஓரளவு நிம்மதி அடைந்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications