என்னால முடியாது..மோடிய கேளு..! தமிழகத்தில் மதுவிலக்கு எப்போ? மடக்கிய வாக்காளர்..அன்னியூர் சிவா பதில்
விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத் தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைய இருக்கும் நிலையில் வேட்பாளர்கள் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது, இளைஞர் ஒருவர் திமுக சொன்ன மதுவிலக்கு எப்போது அமல்படுத்தப்படும் என கேள்வி கேட்க,, அது எம்.எல்.ஏ.வால் முடியாது மோடியிடம் கேளுங்கள் என அவர் பதிலளித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
மக்களவைத் தேர்தல் முடிவடைந்த கையோடு விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்போடுதேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. தங்கள் எம்எல்ஏ மரணமடைந்ததால் மீண்டும் திமுகவே அந்த தொகுதியில் போட்டியிடுகிறது.

திமுக சார்பில் வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டு இருக்கிறார். தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தேர்தலில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்தது அதிமுக.
பணபலம், ஆளுங்கட்சி அராஜகம் உள்ளிட்டவற்றால் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார் கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி. அதே நேரத்தில் வன்னியர் வாக்குகள் அதிகம் இருப்பதால் விக்கிரவாண்டி தொகுதியில் பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் என அறிவித்தார் ராமதாஸ். அந்த கட்சியின் சார்பில் வேட்பாளராக சி.அன்புமணி அறிவிக்கப்பட்டுள்ளளார். இதேபோல தர்மபுரி தொகுதியில் சௌமியா அன்புமணியை எதிர்த்து போட்டியிட்ட அபிநயாவும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
இதை அடுத்து விக்கிரவாண்டி தேர்தல் களத்தில் மும்முனை போட்டி உருவாகி இருக்கிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் நாளை மறுநாளான 10ஆம் தேதி நடக்கவிருக்கும் நிலையில், இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற இருக்கிறது. இதைடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் அங்கு முகாமிட்டு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
மேலும் தற்போது அன்னியூர் சிவா இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களுடன் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அன்னியூர் சிவா விக்கிரவாண்டி பகுதியில் தனது ஆதரவாளர்களுடன் அன்னியூர் சிவா, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது தனக்கு வாக்களித்தால் திமுக அரசின் நலத்திட்டங்களை பெற்றுத் தருவேன் எனக் கூறியதோடு, திமுக அரசு அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.
அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது திமுக மதுவிலக்கு தமிழகத்தில் அமல்படுத்தப்படும் என அறிவித்ததே.. அந்த வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும் என அன்னியூர் சிவாவை நோக்கி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அன்னியூர் சிவா, மதுவிலக்கை எம்.எல்.ஏ.வால் அமல்படுத்த முடியாது.. மோடி கிட்ட போய் கேளுங்க.. குஜராத்தில் அமல்படுத்த சொல்லுங்க என்றார்.
இதனையடுத்து அங்கிருந்த திமுகவினர் அந்த இளைஞரை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் அவர் அவர்களுடனும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது 'உங்க வேட்பாளரிடம் நாங்க கேட்டோமா? நீங்க ஏன் கேக்குறீங்க என திமுகவினர் கேட்டனர். தற்போது இந்த வீடியோவை பாமவினர், இந்திய அரசியல் சாசனத்தின் 47ஆம் பிரிவில் மதுவிலக்கு மாநில அரசின் அதிகாரத்தின் கீழ் அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியே நினைத்தாலும் மதுவிலக்கை அமலாக்க முடியாது. ஆனால், மு.க. ஸ்டாலினால் முடியும். இந்த அடிப்படை கூட தெரியாத திமுக வேட்பாளர்” என சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications