விழுப்புரம் காதலியை வீடியோ எடுத்த காதலன்.. மிரட்டி மிரட்டியே... உடந்தையாக இருந்த குடும்பம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் காதலியை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். இளைஞரின் இந்த மோசமான நடவடிக்கைக்கு உடந்தையாக இருந்த அவரது குடும்பத்தினரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 20 வயதாகும் இளம் பெண் லட்சுமி ((பெயர் மாற்றப்பட்டுள்ளது).

லட்சுமிக்கும் பெரும்புகை கிராமத்தை சேர்ந்த 30 வயதாகும் வெங்கடேசன் அறிமுகமானார். இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காதலியை வெங்கடேசன் ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அத்துடன் வாட்ஸ் அப்பில் வீடியோ காலில் பேசிய வெங்கடேசன், தனது காதலியிடம் ஆடைகள் அனைத்தையும் களைய வைத்து பேசி உள்ளார். இதில் அவர் நிர்வாணமாக இருப்பதை தனது செல்போனில், காதலிக்கே தெரியாமல் பதிவு செய்து கொண்டிருக்கிறார்.
இந்த வீடியோவை காதலியிடம் காண்பித்து, தனக்கு தேவைப்படும் போதெல்லாம் மிரட்டி, அவரை வீட்டுக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்திருக்கிறார். இதையும் வீடியோ எடுத்து வைத்து மிரட்டி வந்ததாக சொல்லப்படுகிறது. வெங்கடேசனின் இந்த நடவடிக்கைகளுக்கு அவரது அண்ணன் புருஷோத்தமன் (32), உறவினர் பூபாலன் (40), பூபாலன் மனைவி புஷ்பா (35) ஆகியோர் உடந்தையாக இருந்தாக சொல்லப்படுகிறது.
வெங்கடேசனின் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட இளம்பெண் லட்சுமி செஞ்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி வழக்கு பதிவு செய்து, இளைஞர் வெங்கடேசன், அவருக்கு உறுதுணையாக இருந்த புருஷோத்தமன் ஆகியோரை கைது செய்தனர். இதனிடையே பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications