விஜய் மாநாட்டில் முதல் என்ட்ரியான நடிகர்! சென்னையில் இருந்து சைக்கிளிலேயே வந்த பிரபலம்! யாரு பாருங்க

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: நடிகர் விஜயின் முதல் அரசியல் மாநில மாநாட்டில் பங்கேற்க முதல் ஆளாக பிரபல நடிகர் சவுந்தரராஜா சென்னையில் இருந்து விக்கிரவாண்டி வி சாலைக்கு வந்து மரக்கன்று நடவு செய்தார் . யார் அந்த பிரபலம் வாங்க பார்க்கலாம்.

தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ள நடிகர் விஜயின் முதல் அரசியல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி சாலையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணிக்கு நடிகர் விஜய் பேச உள்ளார்.

tvk maanadu actor vijay soundararaja

இந்த மாநாட்டில் நடிகர் விஜய் தனது கட்சியின் கொள்கைகளை அறிவிக்க உள்ளார். இதனால் மாநாடு பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதோடு நேற்று முதலே மாநாட்டுக்கு தொண்டர்கள் திரண்டு வந்தனர். மதிய வேளையிலேயே மாநாட்டு அரங்கில் போடப்பட்டு இருந்த அனைத்து இருக்கைகளும் நிரம்பின. கொளுத்திய வெயிலையும் பொருட்படுத்தாமல் தொண்டர்கள் இருக்கைகளில் அமர்ந்து இருந்தனர். இந்த மாநாடு என்பது அனைத்து மக்களிடமும் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

tvk maanadu actor vijay soundararaja

நடிகர் விஜய்க்கு அரசியல்வாதிகள், சினிமா நடிகர், நடிகைகள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தான் நடிகர் விஜயின் தவெக முதல் அரசியல் மாநாட்டுக்கு முதல் ஆளாக நடிகர் சவுந்தராஜா என்ட்ரி கொடுத்தார். சென்னையில் இருந்து சைக்கிளில் அவர் விக்கிரவாண்டி வி சாலைக்கு அதிகாலையிலேயே வந்தார். அதன்பிறகு அவர் மாநாடு நடக்கும் இடத்தில் நினைவு மரக்கன்றை நடவு செய்தார்.

சவுந்தரராஜா தமிழ் சினிமாவில் சுந்தரபாண்டியன் படத்தில் பரஞ்சோதி கதாபாத்திரத்தில் நடித்தார். அதன்பிறகு தர்மதுரை படத்தில் அர்ஜூனன் உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக நடிகர் விஜயின் தெறி படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்திலும், பிகில் திரைப்படத்தில் குணா கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

tvk maanadu actor vijay soundararaja

பிகில் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சியில் கூட நடிகர் விஜய், சவுந்தரராஜா பற்றி பேசியிருப்பார். அதாவது, ‛‛இந்த படத்தில் நல்ல நண்பரை சந்தித்த சந்தோஷம் உள்ளது. சவுந்தரை சந்தித்தேன்.அவர் அடிக்கடி ‛மண்ணுக்கும், மக்களுக்கும்'என்று தான் பேசுவார். அவர் பேச்சு எல்லாம் அதனை சுற்றித்தான் இருக்கும். மண்ணுக்கும், மக்களுக்கும் ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் அண்ணன் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். நட்புக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பார். ரொம்ப பெரிய வார்த்தை தான். உயிரை கூட கொடுக்க தயங்கமாட்டார் என்ற நல்ல நண்பரை சந்தித்தேன்'' என்று புகழ்ந்து இருப்பார்.

tvk maanadu actor vijay soundararaja

நடிகர் சவுந்தரராஜா நடிகராக இருப்பது மட்டுமின்றி இயற்கை மற்றும் சமூக ஆர்வலராகவும் இருக்கிறார். இவர் மண்ணுக்கும், மக்களுக்கும் சமூக நல அறக்கட்டளையை நண்பர்கள், குடும்பத்துடன் சேர்ந்து தொடங்கி அதில் செயல்பட்டு வருகிறார். விஜய் மாநாட்டுக்கும் கூட மண்ணுக்கும், மக்களுக்கும் அறக்கட்டளையை சேர்ந்தவர்களுடன் சைக்கிளில் தான் நடிகர் சவுந்தரராஜா என்ட்ரி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+