காந்தி பெயர் இருந்தா என்ன? ராமர் இருந்தா என்ன? 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்! சிவி சண்முகம் ஒரே போடு
விழுப்புரம்: அதிமுக கட்சி நிகழ்ச்சியில் பேசிய சண்முகம், மகாத்மா காந்தி வேலைவாய்ப்புத் திட்டத்தின் பெயரே மாற்றுவதால் என்ன எனக் கேள்வி எழுப்பியுள்ளார். வேலைவாய்ப்பு தான் முக்கியமே தவிரப் பெயர் முக்கியமில்லை என்றும் தெரிவித்தார். மேலும், திட்டத்திற்கு காந்தி பெயர் இருந்தால் என்ன.. ராமர் பெயர் இருந்தால் என்ன என்றும் கேட்டுள்ளார்.
மத்திய அரசு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்குப் பதிலாகப் புதிய திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. மகாத்மா காந்தி வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 100 நாட்கள் வேலை கிடைக்கும். அதை நீக்கிவிட்டு விக்சித் பாரத் - வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத இயக்கம் - கிராமப்புறம்' என்று திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இதைச் சுருக்கமாக விபி-ஜி ராம்ஜி என்று அழைக்கிறார்கள்.

மகாத்மா காந்தி வேலைவாய்ப்புத் திட்டம்
மகாத்மா காந்தி பெயரை நீக்கியதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். நாடாளுமன்றத்திலும் இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கத்தை எழுப்பி வருகிறார்கள். தமிழ்நாட்டில் திமுக உள்ளிட்ட பல கட்சிகள் இந்தப் பெயர் மாற்றத்தைக் கண்டித்துள்ளன. மேலும், மகாத்மா காந்தி திட்டத்தில் முழுச் செலவும் மத்திய அரசுக்கு இருக்கும். ஆனால், புதிய திட்டத்தில் மாநில அரசின் பங்களிப்பும் இருக்கும் நிலையில், அதையும் பல எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் எதிர்த்தன.
சிவி சண்முகம்
இதற்கிடையே விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் பெயரை மாற்றுவதால் என்ன பிரச்சினை என கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக கட்சி நிகழ்ச்சியில் பேசிய சண்முகம், வேலைவாய்ப்பு தான் முக்கியமே தவிரப் பெயர் முக்கியமில்லை என்றும் தெரிவித்தார். மேலும், திட்டத்திற்கு காந்தி பெயர் இருந்தால் என்ன.. ராமர் பெயர் இருந்தால் என்ன என்றும் கேட்டுள்ளார்.
பெயர் முக்கியமில்லை
இது தொடர்பாக அவர் பேசுகையில், "100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை நிறுத்த போகிறார்கள்.. நிறுத்திவிட்டார்கள். பெயரை மாற்றிவிட்டார்கள் எனச் சொல்லி வருகிறார்கள். என்ன பெயர் இருந்தால் என்ன? ராமர் பெயர் இருப்பதால் எங்களுக்கு என்ன? எங்களுக்கு ஒருவேளை சோறு கிடைத்தால் போதும். நீங்கள் காந்தி பெயரை வைத்துக் கொள்ளுங்கள். ராமர் பெயரை வைத்துக் கொள்ளுங்கள். எங்களுக்கு அதன் பெயர் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் தான். பெயரில் என்ன இருக்கிறது.
காந்தி மீது திடீரெனப் பாசம் வந்துவிட்டது போலப் பேசி வருகிறார்கள். எங்களுக்கு எந்தப் பெயர் இருந்தாலும் பிரச்சினை இல்லை.. வேலைவாய்ப்பு இருந்தால் போதும்.! 150 நாள் கொடுத்தாலும் ஓகே தான்.. 100 நாள் கொடுத்தாலும் ஓகே தான்" என்று அவர் பேசியுள்ளார்.
-
தவெக-வில் சேர்ந்த 3 நாளில் எம்.எல்.ஏ சீட் கொடுத்த விஜய்.. உதயநிதி தொகுதியில் களமிறங்கும் செல்வம்! -
"நேர்காணல் கூட இல்லை.." விஜய் வேட்பாளர்களை அறிவிக்கும் போதே போராட்டத்தில் இறங்கிய தவெகவினர் -
திமுகனாலும்.. தவெகனாலும்.. சீட்டுகளை அள்ளும் மாஜி அதிமுக தலைகள்! விஜய் லிஸ்ட்டில் யார் யார் பாருங்க! -
ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு சீட் கொடுத்த எடப்பாடி.. சென்னை திருவிக நகர் தொகுதியில் போட்டி -
அதிமுக 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணா நகரில் கோகுல இந்திரா, ஆயிரம் விளக்கில் வளர்மதி! -
மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி போட்டி! ஏ.சி. சண்முகம் களம் காண்கிறாரா? -
பூவை ஜெகன்மூர்த்தி கட்சிக்கு 1 தொகுதியை ஒதுக்கியது அதிமுக! மீண்டும் கே.வி.குப்பத்தில் போட்டி -
தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகள் இறுதியானது.. திமுக தலைமையகத்தில் சுதீஷ் சொன்ன சேதி! -
“ரெஸ்ட்டா? எனக்கா?” 13வது முறையாக தேர்தலில் களமிறங்கும் துரைமுருகன்.. மீண்டும் காட்பாடியில் போட்டி! -
Election Exclusive: வரம் கொடுத்த சாமி தலையில் கை வைத்த பிரேமலதா.. திமுக தொகுதிகளை கேட்டு அடம்! குட்டையைக் குழப்பு காங்.! -
பெண்கள், படித்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்..டாக்டர் பட்டம் பெற்றவர்கள் மட்டும் இத்தனை பேரா? -
Election Exclusive: வசூல்ராஜா ஹீரோவுக்கு 0..காமெடியன் கருணாஸூக்கு 1! அரசியலின் இன்னொரு மதிமுக மநீம? வைகோ 2.0 கமல்ஹாசன்?









Click it and Unblock the Notifications