10 உயிர் போயிருக்காதே.. போன வருசமே சாராயம் பற்றி புகாரளித்தேன்! போலீஸ் மீது அதிமுக எம்எல்ஏ புகார்
விழுப்புரம்: மரக்காணத்தில் கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக கடந்த ஆண்டே தான் புகாரளித்தவுசன் காவல்துறை நடவடிக்கை எடுத்து இருந்தால் 10 உயிர்களை இழந்து இருக்க மாட்டோம் என அதிமுக எம்.எல்.ஏ அர்ஜுனன் குற்றம்சாட்டி இருக்கிறார்.
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாரம் அருந்தி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்து உள்ளது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், அதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இதுவரை 14 ஆக அதிகரித்து உள்ளது. அதேபோல், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த சித்தாமூரில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கையும் 9 ஆக உயர்ந்து உள்ளது. கடந்த 14 ஆம் தேதி விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக இருந்த நிலையில் மேலும் 6 பேர் அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்தனர்.
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் இறந்தவர்கள் குடித்த கள்ளச்சாரம் ஒரே வகையானது என்று கூறப்படுகிறது. தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு, உயிரிழந்தவர்கள் அருந்தியது மனிதர்கள் அருந்தும் சாராயம் இல்லை என்றும், அதில் மெதனால் கலக்கப்பட்டு இருப்பதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.
இந்த நிலையில் நேற்று விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் முக ஸ்டாலில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அத்துடன் உயிரிழந்தவர்கல் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அவர் அறிவித்தார். இதனை தடுக்கத் தவறியதாக கூறி காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மரக்காணம் காவல் நிலைய ஆய்வாளர் அருள் வடிவழகன், உதவி ஆய்வாளர் தீபன், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் மரியா சோபி மஞ்சுளா மற்றும் உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். அங்கு கள்ளச்சாரம் விற்றதாக அமரன் என்பவர் கைதானார்.
அதேபோல் செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த், சித்தாமூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் மோகன சுந்தரம் மற்றும் மதுராந்தகம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உதவி ஆய்வாளர் துரைபாண்டியன் ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இச்சம்பவத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த குற்றவாளிகள் மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அடுத்தடுத்து மேலும் சிலர் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அதிமுக எம்.எல்.ஏ. அர்ஜுனன் கடந்த ஆண்டே கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்ததாக கூறி இருக்கிறார். இது தொடர்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற அதிமுக போராட்டத்தில் பேசிய எம்.எல்.ஏ அர்ஜுனன், "பாண்டிச்சேரி எல்லையில் கஞ்சா விற்கின்றனர்.
தெருவுக்கு தெரு கஞ்சா விற்கின்றனர். காவல் ஆய்வாளர் சுரேஷ் பாபுவிடம் கஞ்சா விற்பதாக புகாரளித்தால், கஞ்சா விற்பவனிடமே சென்று எம்.எல்.ஏ உன்மீது புகாரளிக்கிறார் என்று சொல்கிறார். கள்ளச்சாராயம் விற்பதாக புகாரளித்தால், அதை விற்பவரிடமே போலீஸ் சொல்கிறது." என்றார்.
கடந்த டிசம்பர் மாதம் கஞ்சா, சாராய விற்பனைக்கு துணை போகும் காவல் அதிகாரிகள் குறித்தும் சம்பந்தப்பட்ட சமூக விரோதிகளுக்கே என் புகாரை பற்றி தகவல் அளித்தது குறித்தும் கண்டன ஆர்பாட்டத்தில் பேசிய அன்றே நடவடிக்கை எடுத்து இருந்தால் விலைமதிப்பில்லா 10 உயிர்களை இன்று இழந்திருக்க மாட்டோம். https://t.co/AsZQWtBXvb
— Arjunan M.L.A (Tindivanam Assembly. T.N) (@Arjunanmla) May 15, 2023
இந்த வீடியோவை ட்விட்டரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பதிவிட்ட அர்ஜுனன், "நான் அளித்த கஞ்சா விற்பனை குறித்து அளித்த புகாரை கஞ்சா வியாபாரியிடமே தெரிவித்த மரக்காணம் காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு குறித்து ஆர்ப்பாட்டத்தில் பேசிய பதிவு" என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் டிசம்பர் மாதம் வெளியிட்ட ட்விட்டர் பதிவை ரீட்வீட் செய்து இருக்கும் அர்ஜுனன் எம்.எல்.ஏ, "கடந்த டிசம்பர் மாதம் கஞ்சா, சாராய விற்பனைக்கு துணை போகும் காவல் அதிகாரிகள் குறித்தும் சம்பந்தப்பட்ட சமூக விரோதிகளுக்கே என் புகாரை பற்றி தகவல் அளித்தது குறித்தும் கண்டன ஆர்பாட்டத்தில் பேசிய அன்றே நடவடிக்கை எடுத்து இருந்தால் விலைமதிப்பில்லா 10 உயிர்களை இன்று இழந்திருக்க மாட்டோம்." என்று பேசி உள்ளார்.
-
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
விஜயின் தவெக சரியில்லை... தமிழ்நாடு பிஷப் கவுன்சில் திமுக கூட்டணிக்கு ஆதரவு.. அதிமுக மீது ‘அட்டாக்' -
“வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை அவதூறாகப் பேசி மிரட்டி வருகின்றனர்”- விஜய் பரபரப்பு குற்றச்சாட்டு -
அதிமுகவுக்கு விவசாய அமைப்பு, ரஜினி ரசிகர் மன்றம் வரிசையில் மேலும் ஒரு அமைப்பு ஆதரவு! இபிஎஸ் ஹேப்பி! -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
இயக்குநர் மோகன் ஜி வீட்டுக்கு! ரூ 8000 கூப்பனுடன் வந்த 4 பெண்கள்! ரேஷன் கார்டு கேட்டு அடம்! -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
அமைச்சரவையில் இட ஒதுக்கீடு வேண்டும்.. தேர்தல் நேரத்தில் விசிக எம்.பி எழுப்பிய ‘மேஜர்’ கோரிக்கை! -
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
நெல் ஊக்கத்தொகை.. கடிதத்தை பொதுவெளியில் வெளியிட தயாரா.. நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால் -
ரூ.8000 கூப்பன் கொடுத்து.. வாக்கு கேட்ட திமுக வேட்பாளர் செந்தில்! கொந்தளிக்கும் அதிமுக -
தேர்தல் நேரத்தில் கல்லா கட்டும் 'குட்டி குட்டி' நிறுவனங்கள்.. சத்தமே இல்லாமல் நடக்கும் மெகா பிஸ்னஸ்!












Click it and Unblock the Notifications